Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் தலை மீது தொங்கும் கத்தி.. பாபர் அசாம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டம் இன்று

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு நடைபெறுகிறது. 2009 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி, t20 உலக கோப்பை வரலாற்றில் சிறப்பாக விளையாடிய அணிகளின் ஒன்றாக கருதப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது கூட ஜிம்பாப்வே இந்தியா விடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை வந்தது. அப்போது அதேபோல் ஒரு சூழலில் தான் பாகிஸ்தான் அணி சிக்கிக் கொண்டிருக்கிறது.

t20 world cup sa vs ban aiden markram indian national cricket team cricket 20 2024

இன்னும் வெற்றிகணக்கை தொடங்காத பாகிஸ்தான் அணிக்கு இன்று கனடாவுடன் மோதும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அவர்களுடைய ரன் ரேட் உயர்வதோடு சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் தோற்று 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது மீண்டும் அதே மைதானத்தில் பாகிஸ்தான் அணி கனடாவை எதிர்கொள்ள இருக்கிறது. நியூயார்க் மைதானம் பெரிய புதைக்குழி போல் இருப்பதால் யார் சிக்கிக் கொள்கிறார் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நிர்ணயிக்க முடியவில்லை.

அது மட்டும் அல்லாமல் கனடா அணியும் பலமான அணியாக தான் விளங்குகிறது. அமெரிக்காவுக்கு எதிராக முதல் ஆட்டத்திலே கனடா பெரிய இலக்கை நிர்ணயித்தது. அது மட்டுமில்லாமல் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட கனடா 137 ரன்கள் எடுத்து, அதனை அபாரமாக தற்காத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் கனடா எதிர்பாராத விதமாக பெரிய இலக்கை நிர்ணயித்தால் அது நிச்சயம் பாகிஸ்தானுக்கு சங்காக தான் அமையும்.

அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ்-ஐ பூர்வீகமாகக் கொண்ட நிக்கோலோ ஸ்க்ரிட்டன் என்ற வீரர் தற்போது கனடாவுக்காக விளையாடி வருகிறார். இவர் நேபாள் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 52 ரன்கள் அமெரிக்காவுக்கு எதிராக 51 ரன்கள் அயர்லாந்துக்கு எதிராக 49 ரன்கள் என நல்ல பார்மில் இருக்கிறார். இவர் பாகிஸ்தானுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான அணியை பொறுத்தவரை தொடக்க வீரராக சையும் அயுப் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. டி20 உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஆரம்ப கட்டங்களில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாபர் அசாமின் தலை எழுத்து இன்றைய ஆட்டத்தில் மூலம் தீர்மானிக்கப்படும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக கருதப்படுகிறது.

Story first published: Tuesday, June 11, 2024, 6:54 [IST]
Other articles published on Jun 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+