Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 விமானம், 50 மணி நேர பயணம்.. உடைமைகளும் தொலைந்தது.. நொந்து நூடுல்ஸ் ஆன பாட் கம்மின்ஸ்

மும்பை : டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக வந்த ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்க்கு பல மோசமான அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாட் கம்மின்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவினார்.

இதனை அடுத்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காமல் நேரடியாக ஆஸ்திரேலியா சென்று குடும்பத்துடன் இரண்டு நாட்கள் செலவிட்டார். இதனால் ஆஸ்திரேலியா பங்கேற்ற பயிற்சி ஆட்டத்தில் கூட பாட் கம்மின்ஸ் விளையாடவில்லை.

t20 world cup australia cricket team pat cummins cricket 20 2024

இதனை அடுத்து மீண்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து தனது மனைவி குழந்தையுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பாட் கம்மின்ஸ் புறப்பட்டு இருக்கிறார். அப்போது அவர் பல துயரங்களை சந்தித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவருடைய மனைவி வெளியிட்டுள்ள பதிவில் மூன்று விமானம் அதில் ஒரு விமானம் ரத்தாக பாட் கம்மின்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருக்கிறார்.

அதன் பிறகு மீண்டும் விமானங்களை மாறி 50 மணி நேர பயணத்திற்கு பிறகு பாட் கம்மின்ஸ் குடும்பத்தினர் வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் நகருக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் அப்போதுதான் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் கொண்டு வந்த எந்த ஒரு உடமைகளும் விமானத்தில் ஏறவில்லை என்று அப்போதுதான் தெரிந்தது. இதனால் நொந்து நூடுல்ஸ் ஆன பாட் கம்மின்ஸ் அதிகாரிகளை நாடி இருக்கிறார். இதனை அடுத்து ஒரு நாள் கழித்து பாட் கம்மின்ஸ் உடைமைகள் அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

பாட் கம்மின்ஸ் மட்டுமல்லாமல் மேக்ஸ்வெல், ஸ்டார்க் போன்ற வீரர்களும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வந்து அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது இருவரும் விமானம் சரியாக கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பயிற்சி ஆட்டத்தில் சில ஆஸ்திரேலியா வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கும் மேற்கிந்திய தீவிலிருந்து அமெரிக்காவுக்கும் செல்லும்போது பல பிரச்சனைகள் வீரர்களுக்கு ஏற்படுவதாகவும், இதனை ஐசிசி சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Story first published: Tuesday, June 4, 2024, 6:03 [IST]
Other articles published on Jun 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+