Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் டி20 உலககோப்பை- பாகிஸ்தான் கையில் இந்தியாவின் விதி.. அரையிறுதிக்கு இந்தியா இனியும் செல்லுமா?

மும்பை : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுக்க இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணியில் தான் அரையிறுதி சுற்றுக்கு செல்லும். தற்போது ஆஸ்திரேலிய அணி குரூப் ஏ பிரிவில் விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது என்பதால் ரன் ரேட் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

t20 world cup 2024 ind w vs aus w women cricket

ஆனால் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளுடன் ஜீரோ பாயிண்ட் 32 என்ற ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தற்போது மூன்றாவது இடத்தில் 4 புள்ளிகளுடன் 0.28 என்ற ரன்ரேட் உடன் அந்த அணி இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கும் அரை இறுதி செல்ல ஒரு மெல்லிய வாய்ப்பு இருக்கிறது.

பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் மைனஸ் 0.481 ரன் ரேட் உடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தானின் நியூசிலாந்து அணி கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணி அரை இறுதிச் சற்றுக்கு செல்லும். ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்தியா தொடரை விட்டு வெளியேறிவிடும்.
நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சுற்றுக்கு செல்லும்.

இல்லையெனில் பாகிஸ்தான அணி நியூசிலாந்தை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவின் அரையிறுதி கனவு தற்போது பாகிஸ்தான் கையில் தான் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி நடப்பு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும்தான் வெற்றி பெற்று இருக்கிறது.

இதேபோன்று குரூப் பி பிரிவில் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ,தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா வெளியேறி விடும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணி அரை இறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 13, 2024, 23:56 [IST]
Other articles published on Oct 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+