Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பையை தட்டி தூக்கிய ரோஹித் படை.. இந்தியாவுக்கு எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும்?

டெல்லி: டி20 உலகக் கோப்பை பைனல்ஸில் நேற்று தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் கோப்பை வென்ற இந்தியாவுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்.. இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா தொடங்கி மற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது.

t20 world cup ind vs sa 20 2024 cricket

இதன் மூலம் தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு உலகக் கோப்பையைத் தென்னாப்பிரிக்கா வெல்லாத நிலையில், இந்த முறையும் அது தொடர்கிறது.

டி20 உலகக் கோப்பை: இதன் மூலம் இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், அதன் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையைத் தட்டி தூக்கியுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை ஐசிசி மிகப் பெரிய தொகையைப் பரிசுத் தொகையாக அறிவித்து இருந்தது.

இந்த டி20 உலகக் கோப்பைக்கு மொத்தம் $11.25 மில்லியன் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி கோப்பைக்கு இவ்வளவு பெரிய பரிசுத் தொகை அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சரி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு தொகை கிடைக்கும், 2வது இடம் பெறும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும் க்ரூப் ஸ்டேஜில் வெளியேறிய அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பரிசுத் தொகை: டி20 கோப்பையைத் தட்டி தூக்கிய இந்திய அணிக்கு $2.45 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூ. 20.40 கோடிகள்) மற்றும் கூடுதலாக போன்ஸ்கள் பெறுவார்கள். டி20 உலகக் கோப்பை தொடரில் இவ்வளவு பெரிய பரிசுத் தொகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாம் இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு $1.28 மில்லியன் (ரூ. 10.67 கோடி) கிடைத்துள்ளது. அதேபோல அரையிறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ் தான் டீம்களுக்கு தலா $787,500 (ரூ.6.48 கோடி) பெறுவார்கள். அரையிறுதிக்குத் தகுதி பெறாத சூப்பர் 8 டீம்களுக்கு (ஆஸ்திரேலியா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா) $382,500 (ரூ.3.16 கோடி) கிடைக்கும்.

மற்ற டீம்கள்: அதேபோல 9 முதல் 12ஆவது இடம் பிடித்த அணிகளுக்கு (பாகிஸ்தான், இலங்கை, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து) தலா $247,500 (ரூ. 2 கோடி) பெறுவார்கள். 13வது முதல் 20வது இடம் வரை பிடித்த மற்ற அணிகளுக்கு தலா $225,000 (ரூ.1.87 கோடி) வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் போது ரூ.26 லட்சம் போனஸாக வழங்கப்படும்.

டி20 உலகக் கோப்பை பரிசுத் தொகை

சாம்பியன் வெல்லும் அணி - 20.40 கோடி
இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணி - ரூ.10.67 கோடி
அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகள் - 6.48 கோடி
சூப்பர் 8 அணிகள் - ரூ.3.16 கோடி
9 முதல் 12வது இடம் அணிகள் - ரூ.2 கோடி
13 முதல் 20வது இடம் அணிகள் - ரூ. 1.87 கோடி
ஒரு போட்டியில் வெல்லும் போது கிடைக்கும் போனஸ் - ரூ.26 லட்சம்

Story first published: Sunday, June 30, 2024, 8:30 [IST]
Other articles published on Jun 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+