நியூயார்க் : ஐசிசி கோப்பை இந்திய அணி கடைசியாக வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் கோப்பையை வென்றதே கடைசி தொடராகும்.
அதன் பிறகு 2014 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 ஆம் ஆண்டு உலககோப்ப்சி இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என அனைத்து இறுதிப்போட்டியில் விளையாடி இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா ஏன் உலகக் கோப்பைகளை வெல்ல முடிய வில்லை என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களில் விளையாடும் போது முதலில் உங்களுடைய மனதை நீங்கள் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். கையில் என்ன பணி இருக்கிறது என்பதை மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அதைத் தாண்டி வேறு எதையும் யோசிக்க கூடாது.
வெளியிலிருந்து வரும் அழுத்தம் குறித்தும் கவலைப்பட கூடாது. இந்திய அணியில் உள்ள திறமைகள் குறித்து கொஞ்சம் கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஆனால் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. அது எளிமையான பணியும் கிடையாது. எனவே இந்திய அணி தங்களுடைய மனது உள்ள விஷயம் குறித்து தான் யோசிக்க வேண்டும்.நெருக்கடிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து படிக்க வேண்டும்.
நெருக்கடியை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதில் தான் டி20 போட்டியில் வெற்றியையும் தோல்வியும் பிரிகின்றது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி வென்றால் ஆஸ்திரேலியாவை அந்த சுற்றில் எதிர்கொள்ள நேரிடும். அங்கும் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றால் மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு மோத வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.