மும்பை : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிரடி வீரர் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் இடம் பெற்று வந்த ரிங்கு சிங், 2024 ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை.
2024 ஐபிஎல் தொடரில் அவர் 13 போட்டிகளில் 168 ரன்கள் ,மட்டுமே எடுத்துள்ளார். அவரால் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. இதை அடுத்து உலகக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம் கிடைத்தது.

இந்த நிலையில் தன்னை இந்திய டி20 அணியில் சேர்த்தால் தான் சிறப்பாக பினிஷிங் செய்வேன் என சூசகமாக குறிப்பிடும் வகையில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரிங்கு சிங் பேட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் பகிரப்படு இருக்கிறது. அந்த பேட்டில் நான் போட்டிகளை முடிப்பேன் என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் தேர்வுக் குழுவிற்கு ரிங்கு சிங் சூசகமாக செய்தி ஒன்றை கூறி இருக்கிறார்.
தன்னை 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தன்னை தேர்வு செய்தால், தான் போட்டிகளை சிறப்பாக பினிஷிங் செய்வேன் என குறிப்பிடும் வகையில் அவரது சமூக வலைதள பதிவு உள்ளது. இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ரிங்கு சிங்கை இந்திய டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ்.
மாற்று வீரர்கள் - சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான்