Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரிதாபம்.. ரஷித் கானால் தோற்ற ஆஃப்கானிஸ்தான்.. டாஸிலேயே சோலி முடிஞ்ச்.. யாருப்பா ஐடியா கொடுத்தது!

டிரினிடாட் : டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது. முதல்முறையாக அரையிறுதி சுற்றில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு, அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

t20 world cup SA vs AFG 20 2024

வெறும் 21 ஓவர்களில் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதுவரை டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா அணி, இம்முறை வென்று இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் பேட்டிங் காரணமாக பார்க்கப்பட்டாலும், அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் தவறான முடிவு தோல்வியின் தொடக்க புள்ளியாக உள்ளது. ஏனென்றால் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, பேட்டிங் செய்வதாக ரஷித் கான் அறிவித்தார். டிரினிடாட் மைதானத்தில் நடந்த 4 உலகக்கோப்பை போட்டியில், சேஸிங் செய்த அணிகளே 3ல் வெற்றிபெற்றுள்ளன.

முதல்முறையாக டாஸ் வென்று பேட்டிங் செய்ததே ஆஃப்கானிஸ்தான் அணி தான் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல் பேட்டிங்கில் எடுக்கப்பட்ட சராசரி ஸ்கோரே 95 ரன்கள் என்பதும் முன்னதாக தெரிய வந்த போதும், ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதேபோல் பிட்சில் சில வெடிப்புகள் இருந்ததோடு, ஆங்காங்கே புற்களும் இருந்திருக்கின்றன. இதன் மூலம் வேகம், ஸ்விங் மற்றும் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்று பிட்ச் ரிப்போர்டிலேயே தெரிய வந்திருக்கும்.

இந்த மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் 51 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. அதில் 38 விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்களால் வீழ்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணியின் விமானம் தாமதமாக வந்ததால், பயிற்சி இல்லாமலேயே போட்டியில் களமிறங்கியுள்ளது. இவ்வளவு விவகாரங்கள் பிரச்சனையாக தெரிந்த போது, ஆஃப்கானிஸ்தான் முதல் பேட்டிங் ஆடியதற்கான காரணம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, June 27, 2024, 8:57 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+