Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. சஞ்சு சாம்சன் சோலி முடிஞ்சுது.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு

பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஞ்சு சாம்சனை இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆட வைக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.

குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டை விட சஞ்சு சாம்சன் அதிக ரன்கள் குவித்திருப்பதை சுட்டி காட்டினர். ரிஷப் பண்ட் மீது பலருக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருந்தது. ஆனால், உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அவர் இந்திய அணியிலேயே அதிக ரன் குவித்த வீரராகவும் மாறி இருக்கிறார்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

குரூப் சுற்றில் நடந்த மூன்று போட்டிகளில் அவர் 96 ரன்கள் சேர்த்தார். அந்த மூன்று போட்டிகளும் பேட்டிங் செய்ய கடினமான நியூயார்க் மைதான பிட்ச்சில் நடைபெற்றது. அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்களே தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறினர். ஆனால், ரிஷப் பிரண்ட் மூன்று போட்டிகளிலும் ரன் சேர்த்தார்.

இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், சஞ்சு சாம்சனை தாண்டி ரிஷப் பண்ட் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார் என்பது பற்றி கூறினார். "ரிஷப் பண்ட் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார். அவர் அவரது வழக்கமான பேட்டிங் ஆர்டர் இல்லை. அவரது பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது. இந்த உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியில் சஞ்சு சாம்சனைதான் ஆட வைக்க வேண்டும் என்றார்கள். அவர் தான் அதிக ரன் குவித்து இருப்பதாக சொன்னார்கள். ஆனால், அந்த சூழ்நிலையிலும் ரிஷப் பண்ட்டை மூன்றாம் வரிசையில் ஆட வைத்தது இந்திய அணிக்கு நன்மையை அளித்துள்ளது. அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் இந்திய அணிக்கு வலது - இடது பேட்டிங் வரிசை அமைந்துள்ளது. ரிஷப் பண்ட் மூன்றாம் வரிசையில் ஆடுவதால் தான் அது நடந்துள்ளது" என சுட்டிக்காட்டி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

ரிஷப் பண்ட் எப்போதும் நான்காம் வரிசையில் அல்லது ஐந்தாம் வரிசையில் தான் பேட்டிங் ஆடுவார். ஆனால், பேட்டிங் ஆர்டரை மாற்றி மூன்றாம் வரிசையிலும் அவர் அதிக ரன் குவித்து இருப்பதால் தான் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார் என ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார். அவர் தற்போது நன்றாக ஆடி வருவதால், இனி இந்த உலகக் கோப்பை தொடர்பு முழுவதும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது.

Story first published: Tuesday, June 18, 2024, 19:31 [IST]
Other articles published on Jun 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+