For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2024 டி20 உலகக்கோப்பை அனைத்து போட்டிகள் அட்டவணை.. தேதி, நேரம், இந்தியா ஆடும் போட்டிகள் எப்போது?

நியூயார்க் : 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இணைந்து நடத்தப்படுகிறது.

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கு முன்பு 16 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 20 அணிகள், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

சூப்பர் 8 சுற்று இரண்டு குழுக்களைக் கொண்டது, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இவ்வாறாக மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.

அமெரிக்காவில் உள்ள மூன்று மைதானங்களான ஃப்ளோரிடா, நியூயார்க் மற்றும் டெக்சாஸ் ஆகியவற்றில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும். மேற்கு இந்திய தீவுகளில் ஆன்டிகுவா & பார்புடா, பார்படோஸ், கயானா, செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்ஸ், மற்றும் ட்ரினிடாட் & டொபாகோ ஆகிய ஆறு நாடுகளும் போட்டிகளை நடத்துகின்றன.

இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படோஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடைபெறும்.

இங்கிலாந்து தற்போதைய சாம்பியனாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து.

ஆண்களுக்கான ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை குரூப் சுற்று அட்டவணை :

ஜூன் 1

அமெரிக்கா vs கனடா: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், மாலை 7.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 2

மேற்கு இந்திய தீவுகள் vs பப்புவா நியூ கினி: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

நமிபியா vs ஓமன்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 3

இலங்கை vs தென் ஆப்பிரிக்கா: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

ஆப்கானிஸ்தான் vs உகாண்டா: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 4

இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் இரவு 8 மணி)

நெதர்லாந்து vs நேபாள்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், காலை 10.30 (இந்திய நேரம் இரவு 9 மணி)

ஜூன் 5

இந்தியா vs அயர்லாந்து: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

பப்புவா நியூ கினி vs உகாண்டா: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 7.30 (இந்திய நேரம் காலை 5 மணி)

ஆஸ்திரேலியா vs ஓமன்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 6

அமெரிக்கா vs பாகிஸ்தான்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், காலை 10.30 (இந்திய நேரம் இரவு 9 மணி)

நமிபியா vs ஸ்காட்லாந்து: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், பிற்பகல் 3 மணி (இந்திய நேரம் இரவு 7.30 மணி)

ஜூன் 7

கனடா vs அயர்லாந்து: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 7.30 (இந்திய நேரம் காலை 5 மணி)

இலங்கை vs வங்கதேசம்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், மாலை 7.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 8

நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், பிற்பகல் 1 மணி (இந்திய நேரம் மாலை 5 மணி)

மேற்கு இந்திய தீவுகள் vs உகாண்டா: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 9

இந்தியா vs பாகிஸ்தான்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

ஓமன் vs ஸ்காட்லாந்து: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, பிற்பகல் 1 மணி (இந்திய நேரம் மாலை 5 மணி)

ஜூன் 10

தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

ஜூன் 11

பாகிஸ்தான் vs கனடா: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

இலங்கை vs நேபாள்: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, மாலை 7.30 (இந்திய நேரம் காலை 5 மணி)

ஆஸ்திரேலியா vs நமிபியா: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 12

அமெரிக்கா vs இந்தியா: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

மேற்கு இந்திய தீவுகள் vs நியூசிலாந்து: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 13

இங்கிலாந்து vs ஓமன்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, பிற்பகல் 3 மணி (இந்திய நேரம் இரவு 7.30 மணி)

வங்கதேசம் vs நெதர்லாந்து: ஆர்னோஸ் வேல் ஸ்டேடியம், செயின்ட் வின்சென்ட், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினி: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 14

அமெரிக்கா vs அயர்லாந்து: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

தென் ஆப்பிரிக்கா vs நேபாள்: ஆர்னோஸ் வேல் ஸ்டேடியம், செயின்ட் வின்சென்ட், மாலை 7.30 (இந்திய நேரம் காலை 5 மணி)

நியூசிலாந்து vs உகாண்டா: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 15

இந்தியா vs கனடா: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

நமிபியா vs இங்கிலாந்து: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, பிற்பகல் 1 மணி (இந்திய நேரம் மாலை 5 மணி)

ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து: டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8:30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 16

பாகிஸ்தான் vs அயர்லாந்து: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, காலை 10:30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

வங்கதேசம் vs நேபாள்: ஆர்னோஸ் வேல் கிரவுண்ட், ஆர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட், மாலை 7:30 (இந்திய நேரம் காலை 5 மணி)

இலங்கை vs நெதர்லாந்து: டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 17

நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

மேற்கு இந்திய தீவுகள் vs ஆப்கானிஸ்தான்: டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஆண்களுக்கான ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று அட்டவணை:

ஜூன் 19

* போட்டி 1: A2 vs D1 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)
* போட்டி 2: B1 vs C2 - டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 20

* போட்டி 3: C1 vs A1 - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)
* போட்டி 4: B2 vs D2 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 21

* போட்டி 5: B1 vs D1 - டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)
* போட்டி 6: A2 vs C2 - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 22

* போட்டி 7: A1 vs D2 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)
* போட்டி 8: C1 vs B2 - ஆர்னோஸ் வேல் கிரவுண்ட், ஆர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 23

* போட்டி 9: A2 vs B1 - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)
* போட்டி 10: C2 vs D1 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 24

* போட்டி 11: B2 vs A1 - டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)
* போட்டி 12: C1 vs D2 - ஆர்னோஸ் வேல் கிரவுண்ட், ஆர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி அட்டவணை:

ஜூன் 26

* அரையிறுதி 1 - பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 27

* அரையிறுதி 2 - கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அட்டவணை:

ஜூன் 29

* இறுதிப் போட்டி - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

Story first published: Friday, May 31, 2024, 13:42 [IST]
Other articles published on May 31, 2024
English summary
T20 World Cup 2024 Schedule: Group Stage & Super Eight Fixtures (Date, Venue, Time)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+