Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்டு கொடுப்பதாக இருந்தால், வார்னரை முதல் ஓவரை வீச சொல்லுங்க.. ஸ்காட்லாந்து வீரர் கிண்டல்

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட முடியும்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி வீட்டுக்கு சென்று விடும். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் வேண்டுமென்றே இந்த போட்டியில் ஸ்காட்லாந்தை வெல்ல வைத்து விடலாம் என்று கிண்டலாக பேசியிருக்கிறார்கள்.

t20 world cup indian national cricket team cricket 20 2024

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்காட்லாந்து வீரர் ஜோன்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின் பேசிய அந்த பேட்டியை நான் நேரலையில் கண்டேன். அது கேட்டவுடன் எனக்குள்ளே நான் சிரித்துக் கொண்டேன். அதில் ஆஸ்திரேலியா அணியில் முன்னாள் கேப்டன் டிம் பெயின், ஆஸ்திரேலியா பாதி அணியை தான் ஸ்காட்லாந்துக்கு எதிராக களம் இறக்க வேண்டும் என்று கூறினார்.

நான் ஆஸ்திரேலியா அணி குறித்து பெரியதாக பின் தொடரவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. எனினும் போட்டிக்கு முன்பு சில விஷயங்களை பேசி சில பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என நான் நினைக்கின்றேன். இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே மிகப் பெரிய பாகை இருக்கின்றது.

இதனால் எங்களுக்கு சாதகமாக ஆஸ்திரேலியா விளையாடினால் நாங்கள் அதைப் பற்றி குறை கூற மாட்டோம். மேலும் டேவிட் வார்னரை எங்களுக்கு எதிராக பந்து வீசு சொன்னாலும் அது நிச்சயமாக காமெடியாக தான் இருக்கும். எனினும் ஆஸ்திரேலியா அணி தொழில் முறையில் கிரிக்கெட் விளையாடுவதில் சிறந்தவர்கள்.

நிச்சயமாக இவ்வாறு பேசிவிட்டு எங்களுக்கு எதிராக அதிரடியாக தான் விளையாடுவார்கள். அவர்கள் அனைத்து போட்டியிலும் எப்படி விளையாடினார்களோஅதே போல் தான் எங்களுக்கு எதிராகவும் விளையாடுவார்கள். எங்கள் அணிக்கு எதிராக அவர்கள் முழு பலத்துடன் விளையாடி எங்களுக்கு சவால்களை அளிக்க வேண்டும். அப்போதுதான் பெரிய சவால்களை நாங்கள் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை கிரிக்கெட் உலகத்திற்கு எங்களால் காட்டிக்கொள்ள முடியும் என்று ஜோன்ஸ் கூறினார்.

Story first published: Thursday, June 13, 2024, 22:35 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+