For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒற்றுமையா இருக்கோம்.. ஹரிஷ் ரவுப்புக்கு ஆதரவு.. கேரி கிரிஸ்டனுக்கும் பதிலடி கொடுத்த ஷாகீன் அப்ரிடி!

நியூயார்க் : அமெரிக்காவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹரிஷ் ரவுட் தனது மனைவியுடன் நடந்து சென்ற போது, ரசிகர் ஒருவர் எல்லைமீறி கிண்டல் செய்துள்ளார். இதனால் பொறுமை இழந்த ஹரிஷ் ரவுப், அந்த ரசிகரை அடிக்க பாய்ந்த வீடியோ ட்ரெண்டாகியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுப்புக்கு சக நட்சத்திர வீரரான ஷாகீன் அப்ரிடி ஆதரவு அளித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் வீரர்களை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். லீக் போட்டிகள் கடந்த வாரமே முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஜூன் 22ஆம் தேதி வரை அமெரிக்காவிலேயே இருக்க முடிவு செய்து முகாமிட்டுள்ளனர்.

t20 world cup haris rauf cricket 20 2024

பாபர் அசாம் உள்ளிட்ட 6 வீரர்கள் லண்டனுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது. இதனிடையே பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனும் பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை என்று கூறியிருந்தார்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இந்த நிலையில் அமெரிக்காவில் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுப் தனது மனைவியுடன் நடந்து சென்ற போது, பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் எல்லை மீறி கிண்டல் செய்துள்ளார். சிறிது நேரம் பொறுமையாக இருந்த ஹரிஷ் ரவுட், ஒரு கட்டத்தை தனது செருப்பை கழற்றி ரசிகரை அடிக்க பாய்ந்தார்.

அப்போது அருகில் இருந்த சில ரசிகர்களும், ஹரிஷ் ரவுப்பின் மனைவியும் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. இதன்பின் ஹரிஷ் ரவுப் தனது எக்ஸ் பக்கத்தில், ரசிகர்களின் ஆதரவை எப்படி பார்க்கிறோமோ அப்படி தான் விமர்சனத்தையும் பார்க்கிறோம். ஆனால் என் குடும்பம், பெற்றோரை அநாகரிமாக விமர்சிக்கும் போது, பதிலடி கொடுக்க தயங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதன்பின் ஹரிஷ் ரவுப்புக்கு ஆதரவாக பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிடி, ஹரிஷ் ரவுப் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் அவமானகரமானது. இன்னொரு மனிதரை இழிவுபடுத்தும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை. அந்த வீடியோவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானத்தை விட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்? நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஹரிஷ் ரவுப்புக்கு ஆதரவாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ஒற்றுமை என்று சொல்லி இருப்பதன் மூலம் கேரி கிரிஸ்டனுக்கும் ஷாகீன் அப்ரிடி பதிலடி கொடுத்துள்ளதாக சில கருத்துகள் எழுந்துள்ளன.

Story first published: Wednesday, June 19, 2024, 10:06 [IST]
Other articles published on Jun 19, 2024
English summary
T20 World Cup 2024 : Shaheen Afridi came in Support of Haris Rauf and Replied back to Pakistan coach Gary Kirsten with Unity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+