SL vs BAN: வங்கதேச வீரர் செய்த செயல்.. 3 பந்துகளில் மாறிய மேட்ச்.. கதிகலங்கிய இலங்கை.. என்ன நடந்தது?
டல்லாஸ்: 2024 டி20 உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான குரூப் டி பிரிவு போட்டி டல்லாஸ் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா 28 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. மேலும், நிதானமாக ஆடி பந்துகளை வீணடித்தனர். இலங்கை அணியால் 124 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதை அடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் சேஸிங் செய்யத் துவங்கியது.

அந்த அணி இரண்டாவது ஓவரிலேயே ஆறு ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து மோசமான துவக்கத்தை பெற்றது. பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹிருதோய் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய ஹிருதோய் 12வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை அடித்தார். அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் போட்டியை தலைகீழாக மாற்றியது.
இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அதன் பின் 48 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய வங்கதேச அணி விக்கெட்களை இழந்தது. ஹிருதோய் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வங்கதேசம் வரிசையாக விக்கெட்களை இழந்தது. எனினும் வெற்றிக்கு குறைவான ரன்களே எடுக்க வேண்டும் என்பதால் சற்று தடுமாறி 19 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணி 8 விக்கெட்களை வீழ்த்திய போதும் தவ்ஹீத் ஹிருதோய் ரன் குவிப்பை கட்டுப்படுத்த தவறியதால் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது


Click it and Unblock the Notifications