மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் மழையின் காரணமாக தங்களுடைய அரை இறுதி வாய்ப்பை நழுவ விட்டு வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இந்திய அணி தற்போது லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதலிடத்தில் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள்.
இதேபோன்று பல்வேறு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் தற்போது நடையை கட்டி தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை போன்ற பலம் வாய்ந்த அணிகள் முதல் சுற்றுலிருந்து வெளியேறிவிட்டது.

இதனால் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு ஈஸியான அணிகள் தான் கிடைக்கப் போகிறது. இந்த சூழலில் மழையால் மற்ற அணிகள் வாய்ப்பு இழந்து செல்வதை இந்திய ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவுக்கே அப்படி ஒரு ஆப்பு காத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை தான் எதிர்கொள்ள போகிறது. இதில் இரண்டில் இந்தியா வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிடம் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றால் கூட அரை இறுதிச் சற்றுக்கு சென்று விடலாம்.
இந்த சூழலில் இந்திய அணி வரும் ஜூன் 27ஆம் தேதி இரண்டாவது அரை இறுதியில் டயானாவில் பலப்பரீட்சை நடத்த வாய்ப்பு இருக்கிறது. எனினும் அன்றைய தேதியில் கயானா பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதல் அரை இறுதிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் கிடையாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
எனினும் போட்டி மழையால் பாதிக்கப்படுவதை தடுக்க கூடுதலாக நான்கு மணி நேரம் வரை காத்திருக்கலாம் என்றும் ஐசிசி இந்தப் போட்டிக்காக விதியை மாற்றி இருக்கிறது. ஆனால் கயானா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அன்றைய நாள் போட்டி நடத்த முடியாது. ரிசல்ட் இல்லாத பட்சத்தில் அது இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் தொடரை விட்டு இந்தியா விளையாடாமலேயே வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் சூப்பர் 8 சுற்றி மூன்று போட்டிகளுமே வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இரண்டாவது அரை இறுதி மழையால் ரத்தனால் கூட இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்று விடும். இதனால் இந்தியாவுக்கும் மிகப்பெரிய ஒரு சவால் காத்திருக்கிறது.