Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பட்டமான ஃபிராடு வேலை செய்யும் டீம் நீங்க தான்.. இந்தியா பற்றி பேசிய ஆஸி. ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்

மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதை சுட்டிக்காட்டிய முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய அணி தான் ஏமாற்று அணி, அந்த அணியின் ஏமாற்று வேலை செய்யும் வீடியோவை பார்த்துவிட்டு வந்து சூர்யகுமார் யாதவ் நோக்கி கை காட்டி விமர்சனம் செய்யுங்கள் என கடுமையாக விளாசி இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் கேட்ச்சில் எந்த குழப்பமும் இல்லை, அது சரியான கேட்ச் தானே சுட்டி காட்டிய சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணியின் அப்பட்டமான பத்து ஏமாற்று வேலைகள் என்ற வீடியோ ஒன்று இணையத்தில் உள்ளதாகவும், அதை அந்த செய்தியை எழுதியவர் பார்க்க வேண்டும் எனவும் கடுமையாக விளாசி இருக்கிறார்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், "இறுதிப் போட்டியில் டேவிட் மில்லரின் கேட்ச்சை சூர்யகுமார் பிடித்தது சரியானது தானா? என ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த கேட்ச் குறித்த அனைத்து வீடியோக்களிலும் சூர்யகுமார் யாதவ் தன்னை அற்புதமாக நிலை நிறுத்திக் கொண்டு பந்தை பிடிப்பது தெரிகிறது. அவர் பந்தை பிடித்து பின்பு மீண்டும் மேலே தூக்கிப்போட்டு, பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விட்டு, பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்து அதை நிறைவு செய்தார்." என்றார்.

மேலும், "அந்த கேட்ச் பற்றி யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அந்த செய்தியை எழுதிய செய்தியாளர் மட்டும் கேள்வி எழுப்புகிறார். ஒருவேளை அவர் ஆஸ்திரேலிய அணி செய்த பத்து அப்பட்டமான ஏமாற்று வேலைகள் என்ற வீடியோவை பார்க்க விரும்பலாம். அதை பார்த்த பின்பு சூர்யகுமார் யாதவை நோக்கி உங்கள் விரல்களை நீங்கள் காட்டலாம். ஒரு சட்டி அதன் மூடியை பார்த்து நீ கருப்பாக இருக்கிறாய் என்றதாம். அது போலத்தான் இருக்கிறது இது." என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

Story first published: Saturday, July 6, 2024, 11:55 [IST]
Other articles published on Jul 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+