ஆண்டிகுவா: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 3 வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது கடைசி சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.இதில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் யார் இருக்கிறார்கள்?
அரை இறுதிக்கு செல்ல யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். சூப்பர் 8 சுற்றில் குரூப் ஒன்றில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆணிகளும், குரூப்-2 பிரிவில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து அமெரிக்கா அணிகளும் உள்ளன.

இதில் குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் விளையாடிய ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் 3 மற்றும் நான்காம் இடத்தில் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் பலம் குன்றிய அணிகள் என்பதால் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
குரூப் 2 பிரிவு தான் தற்போது சிக்கலாக இருக்கிறது. குரூப் ஆப் டெத் எனப்படும் ஒரு போட்டியில் தோற்றாலும் வெளியேறிவிடும் என்ற அளவுக்கு கடும் சவால்களை இந்த பிரிவு தருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இங்கிலாந்து அணியும் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் அமெரிக்க அணி நான்காம் இடத்திலும் உள்ளது. இதில் அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை விட இரண்டாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் இன் ரன் ரேட் பெரிய அளவில் இருக்கின்றது. இந்த சூழலில் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா விளையாடும் போட்டி அந்த (SA) அணிக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் ஆகி விடும்.
தென்னாப்பிரிக்காவை விட ரன் ரேட் வெஸ்ட் இண்டீஸ் அதிகமாக இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு சென்று விடும். அப்படி நடக்கும் பட்சத்தில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரை இறுதிக்கு செல்லலாம். ஒருவேளை கடைசி போட்டிகள் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு செல்லும்.