For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய எட்டு அணிகள் எவை? இந்தியா எந்த குரூப்? முழு விவரம்

மியாமி: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் சூப்பர் 8 சூட்டிற்கு முன்னேறி உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆறு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை உறுதி செய்து விட்டன. மீதமுள்ள இரண்டு இடங்களை பிடிக்கப் போவது எந்த அணிகள்? என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று உள்ளன. மொத்தம் நான்கு குரூப்புகளாக இந்த 20 அணிகளும் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் இடம்பெற்றன. இந்த ஐந்து அணிகளும் தங்களுக்குள் ரவுண்டு ராபின் முறையில் ஒரு அணி மற்ற நான்கு அணிகளுடன் மோதி வருகின்றன. அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றிலும் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெறும். இதிலும் ரவுண்டு ராபின் முறையில் ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ள அணி மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

T20 World Cup 2024 Super 8 Which eight teams qualified for the Super 8 stage

தற்போது குரூப் பிரிவில் எந்தெந்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன என்பதை பார்க்கலாம். குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் சூப்பர் 8-க்கு முன்னேறி உள்ளன. இந்தியா தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அமெரிக்க அணி தான் ஆடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதே பிரிவில் இருக்கும் முன்னணி அணிகளில் ஒன்றான பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி முதல் நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 5 புள்ளிகள் பெற்ற நிலையில் நெட் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து சூப்பர் 8-க்கு முன்னேறியது.

குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 8-க்கு முன்னேறி உள்ளன. இந்த இரண்டு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளன. இந்த பிரிவில் இடம் பெற்றிருந்த வலுவான அணிகளில் ஒன்றான நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணி நான்கு போட்டிகளிலும் நான்கு வெற்றிகளை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த பிரிவில் இரண்டாம் இடத்தை பிடிக்க வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. வங்கதேச அணி தனது கடைசி போட்டியில் நேபாள அணியை வீழ்த்தினால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை வங்கதேச அணி தோல்வி அடைந்தால், நெதர்லாந்து, இலங்கை அணியிடம் தோல்வி அடைய வேண்டும் அல்லது மிகச்சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியும்.

தற்போது சூப்பர் 8 சுற்றில் உள்ள இரண்டு பிரிவுகளில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.

சூப்பர் 8 குரூப் 1 -

ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா
இந்தியா
வங்கதேசம் (அல்லது) நெதர்லாந்து

சூப்பர் 8 குரூப் 2 -

தென்னாப்பிரிக்கா
அமெரிக்கா
வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து

இந்த இரண்டில் இந்தியா இடம் பெற்று இருக்கும் முதல் பிரிவு அதிக சவால் நிறைந்ததாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா என இரண்டுமே சவாலான அணிகள் தான். வங்கதேச அணியையும் குறைத்து எடை போட முடியாது என்பதால் இந்திய அணி இந்த சுற்றிழ்க் விளையாட உள்ள மூன்று போட்டிகளையும் நாக் அவுட் போட்டியாக கருதி விளையாட வேண்டும்.

Story first published: Saturday, June 15, 2024, 23:58 [IST]
Other articles published on Jun 15, 2024
English summary
T20 World Cup 2024 Super 8: Which eight teams qualified for the Super 8 stage?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+