Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இடியை இறக்கிய சூர்யகுமார் யாதவ்.. மிரண்டு போன பிசிசிஐ.. அடியோடு மாறிய இந்திய அணி

மும்பை : இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மட்டுமே சேர்க்கப்படுவார் என் முதலில் நினைத்த நிலையில் விராட் கோலியும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதற்கு கோலியின் விருப்பம் மட்டுமே காரணம் இல்லை என்றும், அதன் பின்னணியில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவுக்கு தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அமைப்பில் இருக்கும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சையும், காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தேவையான உடற்தகுதி பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தன.

இதன் இடையே அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் குடலிறக்கம் எனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் தயாராகி போட்டிகளில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால், அது அத்தனை எளிதான விஷயமல்ல. எனவே, தான் பிசிசிஐ அவசரகதியில் விராட் கோலியை மீண்டும் டி20 அணியில் சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

T20 World Cup 2024 : Suryakumar Yadav is the main reason to include Virat Kohli

விளையாட்டு வீரர்களுக்கு குடலிறக்கம் ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதன் பின் முழுமையாக மீண்டு போட்டிகளில் ஆடும் அளவுக்கு உடற்தகுதி பெற இரண்டு மாதங்கள் ஆகும். இந்த தகவல் மூலம் பிசிசிஐ-யின் டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இடியை இறக்கி இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

இந்திய டி20 அணியின் தூணாக கருதப்படுபவர் சூர்யகுமார் யாதவ். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்தும் வருகிறார். அவரை நம்பித் தான் பிசிசிஐ 2024 டி20 உலகக்கோப்பையில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் களமிறங்க முடிவு செய்து இருந்தது.

ஆனால், ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கி ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் நிலைமையும் தற்போது கேள்விக் குறியாகி இருக்கிறது. அவர் பாதி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதே சந்தேகம் எனும் நிலையில், மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்கள் இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு செல்வது தவறான முடிவாக இருக்கும் என்பதால் தான் கோலி டி20 அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

கோலி தாமாகவே டி20 அணியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவே செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ அவரை உடனே அணியில் இணைத்துக் கொள்ள சூர்யகுமாரின் தற்போதைய சிக்கலான நிலை தான் காரணம். அதே சமயம், விராட் கோலி மிடில் ஓவர்களில் சரியாக ரன் குவிப்பதில்லை என்பதையும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கோலியிடம் கூறி அதை அவர் சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Wednesday, January 10, 2024, 13:41 [IST]
Other articles published on Jan 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+