மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி சூப்பர் 8 சுற்றில் இருந்து வெளியேறியது. 50 ஓவர் உலகக் கோப்பையை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பையையும் கைப்பற்றும் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதனால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தாங்கள்தான் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்று அகங்காரமாக பேசினார்கள். இந்த சூழலில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியது.

இதில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்தோம். இதனால் எங்களை பழிவாங்க இந்தியா காத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் எங்களை சந்திக்க இந்தியா முயற்சி செய்யும். எங்களை தோற்கடிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். இதனால் இந்த போட்டியை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
தொடர் தொடங்குவதற்கு முன்பே பைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் மோதும் என்று டிராவிஸ் ஹெட் கணித்திருந்தார். ஆனால் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஆஸ்திரேலியாவின் கதைக்கு சூப்பர் 8 சுற்றிலே முடிவுரை எழுதியது. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணிக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.
ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டிக்கு விட்டால் தானே நீங்கள் பைனலில் எங்களை தோற்கடிப்பீர்கள். அதற்கு முன்பே உங்களை வெளியே அனுப்பப் போகிறோம் என ரோகித் சர்மா தனி ஆளாகவே நின்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் கடுமையாக போராடினாலும், பும்ரா அவரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் காரணமாக 2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியா தற்போது பழி தீர்த்துக் கொண்டது.