Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு வெறுப்பு எதுக்கு? கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. அமெரிக்க கிரிக்கெட் வீரர்களிடையே வாக்குவாதம்

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதி பெறும் நிலையில் இருக்கின்றது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றாலும் இல்லை போட்டி மழையால் ரத்தானாலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

பாகிஸ்தான அணி சூப்பர் 8 சுற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த நிலையில் விராட் கோலி தொடர்பாக அமெரிக்க கிரிக்கெட் வீரர் சொன்ன ஒரு கருத்துக்கு அந்த அணியின் வீரர்கள் இருவர் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

t20 world cup indian national cricket team cricket 20 2024

அதில் கடந்த உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியின் போது ஐசிசி இணையதளத்திற்கு அமெரிக்க வீரர் ஜஹாங்கீர் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் என்னுடைய கனவுகளில் ஒன்று, விராட் கோலிக்கு எதிராக விளையாடி அதில் யார் சிறந்தவர் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அந்த வாய்ப்பு ஜஹாங்கிற்கு கிடைத்த போது அவர் கோல்டன் டக் ஆனார். இதனை கிண்டல் செய்யும் விதமாக ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவை அமெரிக்க அணிக்காக விளையாடும் ஜாஸ்கரன் மல்ஹோத்ரா என்பவர் பதிவிட்டு இருந்தார். இதற்கு தற்போது அமெரிக்க அணியின் அலிகான் என்ற வீரர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அலி கான், எங்கள் அணியின் வீரர் ஒருவர் எங்களுக்கு எதிராக இப்படி ஒரு கருத்தை கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சக அணி வீரர்களின் மீது ஏன் இப்படி ஒரு வெறுப்பு. இது கொஞ்சம் கூட சரியானதாக இல்லை என்று அவர் கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஜாஸ்கரன் நான் உங்களுக்கும் அமெரிக்கனுக்கும் எவ்வளவு ஆதரவு தெரிவித்து வருகிறேன் என்று என்னுடைய பழைய பதிவுகளை பாருங்கள் என்று கூறி இருந்தார்.

மேலும் தன்னுடைய பதிவையும் ஜாஸ்கரன் மல்ஹோத்ரா நீக்கிவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அணி பாப்பா நியூ கயனா அணியுடன் மோதியபோது ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்து ஜாஸ்கரன் மல்ஹோத்ரா அசத்தியிருந்தார். எனினும் தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஜாஸ்கரன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 13, 2024, 22:46 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+