Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிஸ் பண்ணிட்டீங்களே! டி20 உலககோப்பை முதல் ஆட்டத்திலேயே சரவெடி.. அமெரிக்காவே இப்படி விளையாடுதே

தல்லாஸ் : ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த தொடர் ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் இணைந்து நடைபெறுகிறது.

இன்று காலை இந்திய நேரப்படி ஆறு மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்திய அமெரிக்காவும் கனடாவும் பல பரிட்சை நடத்தியது. இரண்டும் கத்துக்குட்டி அணிகள் தானே அப்படி என்ன நடந்து விடப் போகிறது என பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

t20 world cup indian national cricket team cricket 20 2024

ஆனால் இந்த போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபெற்றது. தலாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய கனடா அணி வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக தொடக்க வீரர் நவ்னீத் 44 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று நிக்கோலோஸ் கிரிட்டான் 31 பந்துகளில் 51 ரன்களும், ஸ்ரேயாஸ் மோவா 16 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க கனடா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணியின் தொடக்க ரர் ஸ்டீவன் டைலர் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதைப்போன்று கேப்டன் மோனாக் பட்டேல் 16 ரன்கள் எடுக்க மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சென்ற ஆண்டீரிஸ் கவுஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அமெரிக்க அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் கனடாவின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தனர். ஆண்டிரிஸ் கவுஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் சேர்க்க, அதிரடியாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார்.

இதில் 10 ஹிமாலய சிக்ஸர்களும், நான்கு பவுண்டர்களும் அடங்கும். இதன் மூலம் அமெரிக்க அணி 17.4 ஓவர்களில் எல்லாம் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. முதல் போட்டியிலே கத்துக்குட்டி அணிகள் அபாரமாக விளையாடி இருப்பது ரசிகர்களுக்கு இந்த தொடர் மீதான நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. இன்று இரவு இந்திய நேரப்படி எட்டு மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கயனா அணிகள் மோதுகிறது.

Story first published: Sunday, June 2, 2024, 10:08 [IST]
Other articles published on Jun 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+