மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கடந்த ஜூன் இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்திருக்கிறது.
இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

எனினும் இந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்கவில்லை. மேலும் அமெரிக்காவுக்கு வந்த விராட் கோலி எந்த ஒரு பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. போட்டிக்கு ஒரு நாள் மட்டும் தான் இடைவெளி இருப்பதால் நியூயார்க் மைதானத்தில் பயிற்சி செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த சூழலில் விராட் கோலி நேரடியாக டி20 உலக கோப்பையில் களமிறங்க போகிறார். இந்த சூழலில் விராட் கோலிக்கு முன் மிகப்பெரிய சாதனை ஒன்று காத்திருக்கிறது. விராட் கோலி இன்னும் டி20 கிரிக்கெட்டில் 265 ரன்கள் எடுத்தால் மாபெரும் சாதனை ஒன்றைப் படைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆம் 2007 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான விராட் கோலி இதுவரை 391 போட்டிகளில் விளையாடி 12735 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் இன்னும் 265 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை விராட் கோலிக்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் உலக அளவில் டீ 20 கிரிக்கெட்டில் 13000 ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைக்கும்.
இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 463 டி20 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 22 சதமும் 88 அரை சதமும் அடங்கும். இதேபோன்று பாகிஸ்தான் வீரர் சோயுப் மாலிக் 542 டி20 போட்டிகளில் விளையாடி 13,360 ரன்கள் அடித்திருக்கிறார். மூன்றாம் இடத்தில் பொலார்ட் இருக்கிறார்.பொலார்ட் 660 டி20 போட்டிகள் விளையாடி 12900 ரன்கள் அடித்திருக்கிறார்.
எனினும் பொலார்ட் தற்போது பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனால் விராட் கோலிக்கு பொலார்டை முந்தி மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனினும் பொலார்ட் தற்போது பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனால் விராட் கோலிக்கு பொலார்டை முந்தி மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற நிறைய வாய்ப்பு இருக்கிறது.