நியூயார்க் : டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி முதல் சுற்று வெளியேறியிருப்பதை அந்த அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் கிண்டல் செய்திருக்கிறார். அமெரிக்கா மற்றும் இந்தியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியும், கனடாவுக்கு எதிராக மட்டும் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவும் அயர்லாந்தும் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானதால் அமெரிக்காவுக்கு ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகள் உடன் அமெரிக்க அணி இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றுக்கு சென்று இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல அமெரிக்கா தான் தகுதியான அணி என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் அமெரிக்க அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கிரிக்கெட் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம்.
இந்த சூழலில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு அவர்கள் தகுதி பெற்று இருக்கிறார்கள். அதிர்ஷ்டத்தால் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லவில்லை. அந்த சுற்றுக்கு செல்வதற்கான அனைத்து தகுதிகளும் அமெரிக்க அணிக்கு தான் இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அணியின் திட்டம் இ கே 601 என்ற விமான மூலம் துபாய் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தை பிடித்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது தான்.
அதன் பிறகு அங்கிருந்து என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும் என வசிம் அகரம் கிண்டல் அடித்திருக்கிறார். இ கே 601 என்ற விமானம் அமெரிக்காவிலிருந்து கைக்கு செல்லக்கூடிய விமானமாகும். இதில் செல்வதுதான் தற்போது பாகிஸ்தானின் திட்டம் என பங்கமாக வசிம் அக்ரம் கலாய்த்து இருப்பது ரசிகர்கள் கவனத்தை பெற்று இருக்கிறது.
பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஐசிசி தொடர் என்றால் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. அது பாகிஸ்தான் அணியின் சொந்த மண்ணில் நடத்தப்படுவதால் இந்த தொடர் இல்லாதவர்கள் வெற்றி பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு இருந்துள்ளது.