Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கான பயிற்சியாளர் நேர்முகத் தேர்வு.. கம்பீரிடம் என்ன என்ன கேள்விகள் கேட்கப்பட்டது

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். இதற்கான நேர்முகத் தேர்வு நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர், முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் ராமன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் கம்பீரிடம் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை குழு சில கேள்விகளை கேட்டது. இதற்கு கம்பீர் அளித்த பதிலை பொறுத்து அவருக்கு இந்த பணி கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

t20 world cup gambhir indian national cricket team cricket 20 2024

அப்படி என்ன கேள்வி கேட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், நீங்கள் எந்த மாதிரியான நிர்வாகிகளை வைத்துக்கொண்டு அணியை வழிநடத்துவீர்கள் என்று முதல் கேள்வி கேட்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது கேள்வி அணியில் தற்போது சில வயதான வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பவுலிங் என இரண்டு பிரிவிலும் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் தற்போது இளம் வீரர்கள் அணிக்கு வருவதை நீங்கள் எவ்வாறு கையாளவீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டன், டி20 ஒரு நாள் அணிக்கு ஒரு கேப்டன் என்று நியமனம் செய்யலாமா? இல்லை அது பற்றி உங்கள் கருத்து என்ன என்றும் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீரர்களுக்கு உடல் தகுதி எந்த அளவுக்கு முக்கியம்?

உடல் தகுதியை நிர்ணயம் செய்ய நீங்கள் ஏதேனும் ஐடியா வைத்திருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இறுதி கேள்வியாக இந்திய அணி ஏன் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது? இதனை முடிவுக்கு கொண்டு வர நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்ற ராமன் கம்பீரை புகழ்ந்து பேசி இருக்கும் சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

ஐபிஎல் தொடரிலே சிறந்த கேப்டனாக கம்பீர் இருந்திருக்கிறார். அவர் நிச்சயம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய அணிக்கு பல நல்ல விஷயங்களை செய்வார். கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அவருடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என ராமன் கூறியிருக்கிறார். இதனால் கம்பீரின் பெயர்தான் அடுத்த பயிற்சியாளர் பெயராக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, June 19, 2024, 17:25 [IST]
Other articles published on Jun 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+