Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. தொடங்கும் நேரம் என்ன? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கும் நேரம் மற்றும் ஒளிபரப்பு குறித்த தகவல்களை பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

t20 world cup indian national cricket team cricket India vs Pakistan T20 World Cup 2024 20 2024 vs

இதன் மூலம் இந்திய அணியின் ரன் ரேட் உச்சத்திற்கு சென்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியிடம் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை உருவாகும். இதனால் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி வாழ்வா சாவா போட்டியாக உள்ளது.

இதுவரை டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரேயொரு முறை மட்டுமே இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி நடப்பதால், ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான நேரத்தில் அமர்ந்து பார்க்க முடியும். அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டியை ரசிகர்கள் ஸ்டார்க் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.

அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக பார்க்க முடியும். ஐசிசி தொடர்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி இலவசமாக ஒளிபரப்பி வருகிறது. அமெரிக்காவில் நடந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிக்கெட் விற்பனை விரைவாக விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 8, 2024, 14:59 [IST]
Other articles published on Jun 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+