Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs AFG: நாங்க என்ன கத்துக்குட்டி டீமா? ஆப்கானிஸ்தானை பொளந்த வெஸ்ட் இண்டீஸ்.. இமாலய வெற்றி

செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான குரூப் சுற்று போட்டி செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. இதுவே குரூப் சுற்றில் கடைசியான போட்டி ஆகும். குரூப் சி பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்த இரண்டு அணிகளுமே இதற்கு முன் தாங்கள் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.

குறிப்பாக இரண்டு அணிகளுமே அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தன. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் இந்த இரண்டு அணிகளும் தங்கள் குரூப்பில் முதலிடம் பெறப்போவது யார்? என்ற கேள்வியுடன் இந்த போட்டியில் மோதின.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இதற்கு முன் குருப் சுற்றில் ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகளிலும் 100 ரன்களுக்குள் எதிரணிகளை வீழ்த்தி பலமான பவுலிங் அணியாக தங்களை அறிவித்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 95 ரன்களே அடிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்து பந்துவீச்சாளர்களை பதற வைத்தது. குறிப்பாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்கள் சேர்த்தார். இந்த உலகக் கோப்பையில் இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோரான 95 ரன்களை தாண்டி தனி ஒரு வீரரே அதிக ஸ்கோரை எடுத்து அதிர்ச்சி அளித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 98 ரன்களும், ஷாய் ஹோப் 17 பந்துகளில் 25 ரன்களும், ரோவ்மன் பாவல் 15 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.

துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்து குலாபுதீன் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பின் இப்ராஹிம் சத்ரான் 38 ரன்களும், ஹஸ்மத்துல்லா 23 ரன்களும் சேர்த்தனர். ஆனால், அத்துடன் வரிசையாக விக்கெட்களை இழக்க தொடங்கியது ஆப்கானிஸ்தான். 63 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. அதன் பின் கரீம் 14 ரன்களும், ரஷீத் கான் 18 ரன்களும் சேர்த்தனர்.

16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. வெஸ்ட் இண்டீஸ் 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் தாங்கள் பலம் குறைந்த கத்துக்குட்டி அணி அல்ல என வெஸ்ட் இண்டீஸ் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றில் இருக்கும் மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

Story first published: Tuesday, June 18, 2024, 10:25 [IST]
Other articles published on Jun 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+