Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs ENG: 6 பந்தில் 30 ரன்.. அரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்.. மேட்ச்சை மாற்றிய பிலிப் சால்ட்

செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஒரு வீரர் கூட அரை சதம் அடிக்கவில்லை என்ற போதும் ஒட்டுமொத்த ஸ்கோர் 180 ஆக இருந்தது.

துவக்க வீரர் பிராண்டன் கிங் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 34 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் சற்று நிதானமாகவே ஆடினார். அவர் 32 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரோவ்மன் பாவல் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 17 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். லியாம் லிவிங்ஸ்டன் வீசிய ஓவரில் அவர் மூன்று சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். கடைசியாக களத்தில் இருந்த செர்ஃபேன் ரூதர்போர்ட் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் வெகுவாக உயர உதவினார். இதை அடுத்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ். அடுத்து இங்கிலாந்து அணி 181 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்யத் தொடங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 22 பந்து 25 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய மொயீன் அலி 10 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இந்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் ஃபிலிப் சால்ட் மற்றும் நான்காம் வரிசை வீரர் ஜானி பேர்ஸ்டோ இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். அவர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

ஒரு கட்டத்தில் 42 வந்து 70 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து அணி. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி பெற சரி சமமான வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் 16 வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்ட் வீசினார். அவர் அதற்கு முன் ஒரு ஓவர் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். அதனால் இந்த ஓவரை அவர் கட்டுக்கோப்பாக வீசுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அந்த ஓவரை எதிர் கொண்ட ஃபிலிப் சால்ட் வேறு ஒரு முடிவில் இருந்தார். அந்த ஓவரில் மூன்று ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்தார். அந்த ஒரே ஓவரில் 30 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து அணி. அந்த ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது. அந்த ஓவருக்கு பின் 4 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குச் சென்றது இங்கிலாந்து. இதை அடுத்து 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டு புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, June 20, 2024, 9:52 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+