Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs WI: என் ஓவர்ல 3 சிக்ஸ் அடிக்கிறியா?.. வெஸ்ட் இண்டீஸ் கேப்டனை பொளந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர்

செயின்ட் லூசியா: இங்கிலாந்து அணியின் ஆல் - ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் வீசிய ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பாவல். அதற்கு பழி தீர்க்கும் வகையில் அதே ஓவரின் கடைசி பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் லிவிங்ஸ்டன். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது பிரிவில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடினர். இந்த நிலையில் இங்கிலாந்து அணி அவர்களை கட்டுப்படுத்த வேண்டி பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

ஒரு கட்டத்தில் ஏழாவது பந்துவீச்சாளராக ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பந்து வீச அழைத்தார் கேப்டன் ஜோஸ் பட்லர். லியாம் லிவிங்ஸ்டன் வீசிய 15வது ஓவரை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பாவல் அந்த ஓவரில் இரண்டு சிங்கிள் ரன்கள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். 5 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து இருந்தார். அதனால் லியாம் லிவிங்ஸ்டனுக்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்தது தவறான முடிவாக மாறியது.

இந்த நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் லியாம் லிவிங்ஸ்டன், ரோவ்மன் பாவல் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி பந்தில் பாவல் மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க முயல, அந்த பந்தை மார்க் உட் கேட்ச் பிடித்தார். இதை அடுத்து ஒரே ஓவரில் பேட்ஸ்மேன் பந்து வீச்சாளரை அடித்து துவம்சம் செய்ததும், அதே ஓவரில் பந்து வீச்சாளர் அவரை பழி வாங்கியதும் அடுத்தடுத்து நடந்தது.

இந்த ஓவரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் சேர்த்தது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபிலிப் சால்ட் 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். அவர் 7 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்திருந்தார். பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து இருந்தார்.

Story first published: Thursday, June 20, 2024, 11:09 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+