Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs UGA: 11 ரன்னுக்கு 5 விக்கெட்.. கத்துக்குட்டியை கதற விட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. சிறந்த பவுலிங்

பிராவிடன்ஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அகீல் ஹுசைன் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தப் போட்டியில் அவர் வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி உகாண்டா அணியை கதற விட்டார்.

பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. அடுத்து 174 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் சேஸிங் செய்யத் துவங்கிய உகாண்டா அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார் அகீல் ஹுசைன்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

சுழற் பந்துவீச்சாளரான அவர் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டை சாய்த்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இவர் வீசிய 24 பந்துகளில் 19 டாட் பால்கள் வீசி மிரள வைத்தார். உகாண்டா வீரர்களால் இவரது சுழற் பந்தை கணித்து ஆட முடியவில்லை. அதை தெளிவாக பயன்படுத்திக் கொண்ட அகீல் ஹுசைன் பந்தை நேராக ஸ்டம்ப்புகளை நோக்கி வீசினார். பந்தை தவற விட்ட உகாண்டா வீரர்கள் எல்பிடபுள்யூ மற்றும் பவுல்டு அவுட் முறையில் 5 விக்கெட்களை பறி கொடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு விக்கெட், ஆட்ரே ரஸ்ஸல் ஒரு விக்கெட். குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட் வீழ்த்தினர். உகாண்டா அணி 12 ஓவர்களில்ரன்கள் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

11 ரன்களுக்கு ஐந்து விக்கெட் வீழ்த்திய அகீல் ஹுசைன் தனது சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்தார். அவர் 49 டி20 இன்னிங்க்ஸ்களில் 45 விக்கெட் வீழ்த்தி உள்ளார். குரூப் "சி" பிரிவில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதே பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று அதே நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் 5.225 ஆகும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நெட் ரன் ரேட் 3.574 ஆகும்.

Story first published: Sunday, June 9, 2024, 12:55 [IST]
Other articles published on Jun 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+