Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போல்ட் ரூட்டை எடுத்த சிவசாமி.. கேப்டன் பதவியும் ராஜினாமா.. வில்லியம்சன் முடிவு.. என்ன நடந்தது?

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை வேண்டாம் என்று நிராகரித்துள்ள கேன் வில்லியம்சன், கேப்டன்சி பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இனி வெளிநாட்டு லீக் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், அந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மட்டும் நியூசிலாந்து அணிக்காக விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. 2011ஆம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணியின் ஜாம்பவானாக உள்ள கேன் வில்லியம்சன், காயத்திற்கு பின் டி20 கிரிக்கெட்டின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

t20 world cup indian national cricket team cricket Kane Williamson 20 2024

இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சியையும் கேன் வில்லியம்சன் துறந்துள்ளார். நியூசிலாந்தை பொறுத்தவரை நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களே அணியில் சேர்க்கப்படுவார்கள்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், நியூசிலாந்து கிரிக்கெட்டை எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராகவுள்ளேன். நியூசிலாந்து சம்மரின் போது வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.

நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் சிஇஓ ஸ்காட் வீனிக் பேசுகையில், கேன் வில்லியம்சனுக்காக எங்களின் விதிகளில் சில தளர்வுகளை கொண்டு வருவோம். அவரை நீண்ட நாட்கள் தேசிய அணிக்காக விளையாட வைப்பதற்கு இது உதவியாக இருக்கும். மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களை மட்டுமே தேர்வு செய்யும் நடைமுறை இருந்தாலும், எங்களின் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேனுக்காக தளர்வுகளை கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேன் வில்லியம்சன் நிச்சயம் இடம்பெறுவார் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தை ஏற்காமல் நட்சத்திர வீரர் ட்ரென்ட் போல்ட் லீக் போட்டிகளில் விளையாடினார். ஐசிசி தொடர்களில் மட்டும் நியூசிலாந்து அணிக்காக ஆடி வந்த அவரை ரூட்டை கேன் வில்லியம்சனும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 19, 2024, 8:04 [IST]
Other articles published on Jun 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+