For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த டீமுக்கு வெண்கலக் கிண்ணம் கூட கிடைக்காது.. பாகிஸ்தான் செய்த சொதப்பல்.. இங்கிலாந்து வெற்றி

லண்டன்: 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் தயாராகும் நோக்கில் இங்கிலாந்து அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி மோதியது. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் மற்றும் மூன்றாவது போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டன. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து 183 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது.

நான்காவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. முகமது ரிஸ்வான் (23), பாபர் அசாம் (36), உஸ்மான் கான் (38) ஆகியோர் ஓரளவு ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சில் ரஷீத் (2/27), லிவிங்ஸ்டன் (2/17) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

பதிலடிக்கு வந்த இங்கிலாந்து அணி, பில் சால்ட் (45), ஜோஸ் பட்லர் (39) ஆகியோரின் அதிரடி தொடக்கத்தால் எளிதாக வெற்றி பெற்றது. பின்னர் வந்த பில்ஜாக்ஸ் (20), ஜானி பேர்ஸ்டோவ் (28), ஹரி க்ரூப் (17) ஆகியோரும் ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 15 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் தோல்வியுடன், டி20 உலகக் கோப்பைக்கு முன் தன்னம்பிக்கையை இழந்து இருக்கிறது பாகிஸ்தான் அணி. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் போராடி 2 - 1 என்ற நிலையில் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சொதப்பி, தொடரை இழந்துள்ளது.

இந்த தொடரின் தோல்வி, பாகிஸ்தான் அணியின் டி20 உலகக் கோப்பை வாய்ப்புகளுக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் பாகிஸ்தான் அணி, உலகக் கோப்பையில் எவ்வளவு தூரம் முன்னேற முடியும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Story first published: Friday, May 31, 2024, 10:45 [IST]
Other articles published on May 31, 2024
English summary
T20 World Cup 2024 : World Cup Dreams in Question? Pakistan Disappoints in England Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+