Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: ஹர்சித் ராணா நீக்கம்.. முகமது சிராஜ் vs முகமது ஷமி யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், காயம் காரணமாக விலகிய ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. ஒரு ஓவர் மட்டும் வீசி 16 ரன்கள் கொடுத்த அவர், காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு தசை நாறுகள் கிழிந்ததாகக் கூறப்படுவதால், டி20 உலகக் கோப்பையில் இருந்து அவர் விலகியுள்ளார்.

எனினும், ராணா இன்னும் அதிகாரப்பூர்வமாக விலக்கப்படவில்லை என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். "உடற்தகுதி நிபுணர்கள் அவரைப் பரிசோதித்து வருகின்றனர். ஆனால் நிலைமை நன்றாக இல்லை. இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு," என மும்பையில் செய்தியாளர்களிடம் சூர்யகுமார் கூறினார்.

மேலும் அவர், "15 வீரர்கள் கொண்ட அணியின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், எங்களிடம் போதுமான மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சிறந்தவரைத் தேர்வு செய்வோம். ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேனின் தேவை இருந்தாலும், முதல் 8 பேட்ஸ்மேன்கள் தான் சிறப்பாக செயல்பட வேண்டும்," என்று விளக்கமளித்தார்.

பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறந்து விளங்கிய ராணாவைத் தேர்வுக் குழுவினர் விரும்பியதால் சிராஜ் தொடக்கத்தில் அணியில் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை வென்ற அணியில் சிராஜ் இருந்தாலும், ஜூலை 2025-க்குப் பிறகு டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. 16 டி20க்களில் 7.79 எக்கானமியுடன் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சனிக்கிழமை தொடங்கும் உலகக்கோப்பையில், நடப்புச் சாம்பியன் இந்தியா நாளை அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து உள்ளன.இதனிடையே, ஒரு சிலர் அனுபவ வீரரான முகமது ஷமியை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஷமிக்கு பேட்டிங்கும் வரும் என்பதால், அவரை பரிசீலினை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Friday, February 6, 2026, 16:51 [IST]
Other articles published on Feb 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+