For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ZIM: 12 ஓவரில் 200 ரன் எடுக்கணும்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்தியா செய்ய வேண்டியது இதுதான்

சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் நிலைமை தற்போது வெறும் வெற்றி மட்டும் போதாது என்ற கட்டத்தை எட்டியுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சந்தித்த தோல்வியால், இந்திய அணியின் புள்ளிகள் மட்டுமின்றி நிகர ரன் ரேட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு மைனஸில் உள்ளது. எனவே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அந்த வெற்றியை எவ்வளவு வித்தியாசத்தில் அல்லது எவ்வளவு வேகமாக பெறுகிறார்கள் என்பதும் மிக முக்கியமாக மாறியுள்ளது.

மைனஸில் உள்ள ரன் ரேட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தங்களது நிகர ரன் ரேட்டை மீண்டும் பிளஸ்ஸுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் ஒரு எளிய தீர்வும், இரண்டாவதாக பேட்டிங் செய்து இலக்கை துரத்தினால் மிகவும் கடினமான சவாலும் காத்திருக்கிறது.

T20 World Cup 2026 How India Can Improve Net Run Rate Against Zimbabwe to Secure Semifinal Spot

77 ரன்கள் வித்தியாசம் தேவை

தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் தான் இந்திய அணியின் ரன் ரேட் மைனஸில் சரிந்தது. எனவே அந்த சரிவை ஈடுகட்ட இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் எத்தனை ரன்களுக்குள் ஜிம்பாப்வே அணியை கட்டுப்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் எடுத்தால், ஜிம்பாப்வே அணியை 92 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் சுருட்ட வேண்டும்.

இந்தியா 180 ரன்கள் எடுத்தால், ஜிம்பாப்வே அணியை 103 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தியா 190 ரன்கள் எடுத்தால், ஜிம்பாப்வே அணியை 113 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் வீழ்த்த வேண்டும்.

இந்தியா 200 ரன்கள் எடுத்தால், ஜிம்பாப்வே அணியை 123 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் சுருட்ட வேண்டும்.

இதன் மூலம் முதலில் பெரிய ஸ்கோரை அடித்துவிட்டு, அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி எளிதாக ரன் ரேட்டை உயர்த்த முடியும்.

இரண்டாவதாக பேட்டிங் செய்தால்..

இலக்கை துரத்துவது என முடிவு செய்தால் சமன்பாடு முற்றிலும் மாறிவிடும். சாதாரணமாக 16 அல்லது 17 ஓவர்களில் இலக்கை எட்டினால் ரன் ரேட் சற்று உயருமே தவிர, மைனஸில் இருந்து பிளஸ்ஸுக்கு வராது. உடனடியாக ரன் ரேட்டை பிளஸ்ஸுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், இந்திய அணி மிக அதிரடியாக விளையாடி 10 முதல் 12 ஓவர்களுக்குள் இலக்கை எட்ட வேண்டும்.

ஜிம்பாப்வே 140 ரன்கள் எடுத்தால், இந்தியா அந்த இலக்கை தோராயமாக 10.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.

ஜிம்பாப்வே 160 ரன்கள் எடுத்தால், இந்தியா அந்த இலக்கை தோராயமாக 11.2 ஓவர்களில் எட்ட வேண்டும்.

ஜிம்பாப்வே 180 ரன்கள் எடுத்தால், இந்தியா அந்த இலக்கை தோராயமாக 11.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.

ஜிம்பாப்வே 200 ரன்கள் எடுத்தால், இந்தியா அந்த இலக்கை தோராயமாக 12.1 ஓவர்களில் எட்ட வேண்டும்.

அதாவது, முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினால் மட்டுமே இது சாத்தியமாகும். மிடில் ஓவர்களில் ரன் குவிப்பு சற்று குறைந்தாலும் அது ரன் ரேட்டை கடுமையாக பாதிக்கும். சேஸிங்கில் இத்தனை விரைவாக வெற்றி பெறுவது எளிது அல்ல. எனவே, இரண்டாவதாக பேட்டிங் செய்தால் இந்திய அணியின் நெட் ரன் ரேட் பெரிய அளவில் உயர்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளன.

T20 WC: இப்படி ஒரு பிரச்சனையா? தென்னாப்பிரிக்கா தோற்றால் இந்தியா அரையிறுதி போவதில் சிக்கல் T20 WC: இப்படி ஒரு பிரச்சனையா? தென்னாப்பிரிக்கா தோற்றால் இந்தியா அரையிறுதி போவதில் சிக்கல்

டாஸ் வென்றால் என்ன முடிவு?

இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. ஒருவேளை இந்திய அணி டாஸ் வென்றால், முதலில் பேட்டிங் செய்வதே பாதுகாப்பான முடிவாக இருக்கும். ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்யும்போது 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையான இலக்கு இருக்கும். ஆனால், இலக்கை துரத்தும்போது போட்டியை வெல்வதை விட, எவ்வளவு சீக்கிரம் முடிக்கப் போகிறோம் என்ற கூடுதல் அழுத்தம் ஏற்படும்.

எனவே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தப் போட்டி இந்திய அணிக்கு வெறும் வெற்றி தோல்விக்கானது அல்ல. தங்களது பலத்தை நிரூபித்து, ரன் ரேட்டை உயர்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பதற்கான மிக முக்கியமான போட்டியாகும். பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T20 WC: பாகிஸ்தான் தோற்ற விரக்தி.. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகருடன் மல்லுக்கட்டிய பாகிஸ்தான் நபர்T20 WC: பாகிஸ்தான் தோற்ற விரக்தி.. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகருடன் மல்லுக்கட்டிய பாகிஸ்தான் நபர்

Story first published: Thursday, February 26, 2026, 8:02 [IST]
Other articles published on Feb 26, 2026
English summary
T20 World Cup 2026: India faces a must-win situation against Zimbabwe to boost their negative Net Run Rate. Discover the specific run margins and over targets required for India to reach the T20 World Cup semifinals.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+