Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை: பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது கத்துக்குட்டி அணியை வீழ்த்துவதற்கு சமம்- மஞ்சுரேக்கர்

மும்பை: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெறவில்லை என்றால், அதில் வருத்தப்பட “பெரிதாக ஒன்றும் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதற்கு, இந்தப் போட்டிக்கு தரப்படும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப பாகிஸ்தான் செயல்படுவதில்லை என்பதே காரணம் என்று அவர் புகார் கூறியுள்ளார்.

மேலும், இரு அணிகளின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தானை வெல்லும் ஒவ்வொரு முறையும் “சிறிய கத்துக்குட்டி அணிகளை வெல்வது போல்” உணர்வதாகவும் சஞசய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில், பாகிஸ்தான் அணி இந்தியா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் 'குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இந்திய அணியை போல் பாகிஸ்தான் பலமானதாக இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் இந்தியா விளையாடும் போட்டிகள்தான் பார்க்கக்கூடியவையாக இருக்கிறது.

அதில் ஒரு எதிரணியை தோற்கடிப்பது உண்மையான பெருமையைத் தரும். இதனால், இந்தியா-பாகிஸ்தான் போட்டி இல்லாதது தொடரின் மதிப்பை ஒன்றும் குறைத்துவிடாது” என்றும் மஞ்ச்ரேக்கர் தெரிவித்தார்.“இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், நீண்ட காலமாகவே, போட்டியின் முன் நாம் உருவாக்கும் விளம்பரத்திற்கும், பரபரப்பிற்கும் ஏற்ற வகையில் ஆட்டம் இருப்பதில்லை."

"அதற்கான காரணம் வெளிப்படையானது. இந்தியா போல் பாகிஸ்தான் அணி இல்லை. முன்பெல்லாம், 90களில் மற்றும் அதற்கு முன், பாகிஸ்தான் ஒரு வலுவான அணியாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை,” என்று மஞ்ச்ரேக்கர் கூறினார்.“இப்போது, இந்தியா பாகிஸ்தானை தோற்கடிக்கும்போது, அது இந்தியா சிறிய அணிகளை தோற்கடிப்பது போல் உள்ளது. முன்பு பாகிஸ்தானை தோற்கடித்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்,” என்றார்.

“பாகிஸ்தான் கிரிக்கெட் எப்படி மோசமடைந்துள்ளது என்பது இதுதான். ஆசியக் கோப்பையிலும் இதைப் பார்த்தேன். இந்திய கிரிக்கெட் அமைப்பு மூலம் வரும் இளம் வீரர்களையும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மூலம் வரும் இளம் வீரர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். அது பூமிக்கும் வானத்திற்கும் உள்ள வித்தியாசம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026க்கான பாகிஸ்தான் அணி: சல்மான் அலி அகா (கேப்டன்), அப்ரார் அஹ்மத், பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், க்வாஜா மொஹம்மத் நஃபாய் (விக்கெட் கீப்பர்), மொஹம்மத் நவாஸ், மொஹம்மத் சல்மான் மிர்ஸா, நசீம் ஷா, சாகிப்ஸாதா ஃபார்கான் (விக்கெட் கீப்பர்), சாய்ம் அயூப், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

Story first published: Tuesday, February 3, 2026, 11:49 [IST]
Other articles published on Feb 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+