Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 World cup: இந்திய அணியின் பிளேயிங் XI.. அனைத்து குறையும் தீர்ந்தது.. டி20 உலககோப்பை நமக்கு தான்

மும்பை: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருமே எதிர்பாராத விதமாக இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அக்சர் பட்டேலுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் சஞ்சு சாம்சன், தொடக்க வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த இஷான் கிஷனுக்கு தற்போது இந்திய மெயின் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

T20 World cup 2026

அது மட்டுமில்லாமல் ரிங்கு சிங்கும் தற்போது அணிக்கு திரும்பிருக்கின்றார். இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்குவார்கள். இருவருமே அதிரடியாக ஆடக்கூடியவர்கள் என்பதால் இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமையும்.

மூன்றாவது வீரராக திலக் வர்மா விளையாடுவார். இதேபோன்று நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் விளையாடுவார். ஐந்தாவது வீரராக ஹர்திக் பாண்டியாவும், ஆறாவது வீரராக சிவம் துபேவும் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று ஏழாவது வீரராக அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சுழற் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக எட்டாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி சேர்க்கலாம். இல்லை பேட்டிங் பலப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் ரிங்கு சிங் அந்த இடத்திற்கு வரலாம். ஒன்பதாவது வீரராக வருண் சக்கரவர்த்தி இருப்பார். அதேபோன்று பத்தாவது வீரராக அர்ஸ்தீப் அல்லது ஹர்சித் ராணா ஆகியோர் விளையாடுவார். 11-வது வீரராக பும்ரா அணியில் இருப்பார்.

இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீள மாகவும், பலமாகவும் மாறி இருக்கிறது. இதுபோன்று ஆல்ரவுண்டர்கள் நிறைய பேர் இருப்பதால் பந்துவீச்சும் பலமாக மாறியிருக்கிறது. டி20 உலகக்கோப்பை தற்போது இந்தியாவில் தான் நடைபெறும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறந்த அணி என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்திய அணி பிளேயிங் XI கணிப்பு: 1. சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), 2. அபிஷேக் சர்மா, 3. திலக் வர்மா, 4. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 5. ஹர்திக் பாண்டியா, 6. சிவம் துபே, 7. ரிங்கு சிங்/ வாசிங்டன் சுந்தர், 8. அக்சர் பட்டேல் (துணை கேப்டன்), 9. பும்ரா, 10. ஆர்ஸ்தீப் சிங்/ஹர்சித் ராணா

Story first published: Saturday, December 20, 2025, 17:14 [IST]
Other articles published on Dec 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+