Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2026: இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.. ஆனால் ஒரு விசயத்தில் கவனம் தேவை- கங்குலி

கொல்கத்தா: சொந்த மண்ணில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2024 இல் டி20 கோப்பையை வென்ற இந்திய அணி, தற்போது 2வது முறையாக தொடர்ந்து கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை டி20 உலககோப்பை வரலாற்றில் சொந்த மண்ணில் எந்த அணியும் கோப்பையை வென்றது இல்லை.

அதுமட்டும் இல்லாமல் எந்த அணியும் டி20 உலககோப்பையை தொடர்ந்து 2 முறை வென்றது இல்லை, இந்த சாதனையை இந்தியா மாற்றுடம என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்திய அணி போட்டிகளை தொடங்குவதற்கு முன், கங்குலி முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் சங்கம் ஆஃப் பெங்கால் (CAB) இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், அவர், "இந்த பெரிய தொடர்களில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சரியான நேரத்தில் உச்சக்கட்ட ஃபார்மை அடைந்து, போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடுவதுதான்" என்று குறிப்பிட்டார்.

"இந்தியா ஒரு மிகச் சிறந்த அணி. இப்போது அவர்கள் தங்கள் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். பேட்டிங், சுழற்பந்துவீச்சு, பும்ரா தலைமையிலான வேகப்பந்துவீச்சு என அணியில் மிரட்டும் திறமை உள்ளது" என்று கங்குலி கூறினார். மேலும் "கடந்தகாலம் பொருட்டல்ல, அவர்கள் பெரிய தொடரில் உச்சத்தை எட்டுவார்கள், மேலும் அவர்கள் எனக்குப் பிடித்தமான அணிகளில் ஒன்றாக இருப்பார்கள்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2024 டி20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து, இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் அதிரடி ஃபார்மில் உள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணி அதன் பின் எந்த டி20 தொடரையும் இழந்ததில்லை. நட்சத்திர வீரர்களின் மூலம் இந்தியாவின் மேலாதிக்கம் வெளிப்படுகிறது. ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சாளர்களில் முதலிடத்தில் இருக்கிறார். 2026 டி20 உலகக் கோப்பையின் ஆரம்ப கட்ட குரூப் சுற்றில், இந்தியா அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை எதிர்கொள்கிறது. இக்குழுவில் இருந்து இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

Story first published: Sunday, February 1, 2026, 20:19 [IST]
Other articles published on Feb 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+