Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 WC: இஷான் கிஷனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தது எப்படி?

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சுமார் 2 ஆண்டுகளாக அணியில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருந்த இஷான் கிஷன் மீண்டும் அணிக்குள் நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதில் யாரும் எதிர்பார்க்காத மேலும் பல அதிரடி திருப்பங்கள் காத்திருந்தன. குறிப்பாக, அணியின் துணை கேப்டனாக வலம் வந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெறவில்லை. அதற்கு முன் 2021 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்திய அணியில் இருந்தாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், அவர் மனதளவில் சோர்ந்து போய் நிர்வாகத்திற்கு எதிராக திரும்பியதாகக் கூறப்பட்டது. இதனால் அவர் அணியிலிருந்தே விடுவிக்கப்பட்டார்.

T20 World Cup 2026 Indian Team Ishan Kishan Makes a Grand Comeback to India s 2026 T20 World Cup Squad

ஆனால், நேற்று முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் அவரது தலைவிதியை மாற்றியுள்ளது. ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட இஷான் கிஷன், அந்த அணியை ஒரு போட்டியில் கூட தோற்கவிடாமல் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று, நேற்று கோப்பையையும் வென்று கொடுத்தார். இறுதிப் போட்டியில் அதிரடியாக சதம் அடித்து இருந்தார்.

இந்த அசுரத்தனமான ஃபார்ம் மற்றும் தலைமைப் பண்பு தேர்வாளர்களின் கண்களைத் திறக்க வைத்துள்ளது. 2 ஆண்டுகால "வனவாசம்" முடிந்து, இன்று உலகக்கோப்பை அணியில் கம்பீரமாக இடம்பிடித்துள்ளார்.

கில்லுக்கு கல்தா.. ஓப்பனிங் யார்?

அதே சமயம், துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் மற்றும் சமீபத்திய ஃபார்ம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாகத் தான் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தான் முதன்மை தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு மாற்றுத் தொடக்க வீரராகவும், மாற்று விக்கெட் கீப்பராகவும் இஷான் கிஷன் அணியின் சமநிலையை காப்பார்.

துணை கேப்டன் அக்‌சர் படேல்

தென்னாப்பிரிக்கா தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த ஜித்தேஷ் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் இஷான் உள்ளே வந்துள்ளார். மற்றொரு முக்கிய மாற்றமாக, சுப்மன் கில் இல்லாததால், ஆல்-ரவுண்டர் அக்‌சர் படேல் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி விவரம்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
அபிஷேக் சர்மா
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
சிவம் துபே
அக்‌சர் படேல் (துணை கேப்டன்)
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
ஜஸ்பிரித் பும்ரா
வருண் சக்கரவர்த்தி
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
ஹர்ஷித் ரானா
ரிங்கு சிங்
வாஷிங்டன் சுந்தர்

Story first published: Saturday, December 20, 2025, 14:52 [IST]
Other articles published on Dec 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+