For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டி20 உலக கோப்பை: இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரிப்பு? 20 அணிகளும் தகுதி பெற்றது.. விவரம்

மும்பை: ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் ஆக இந்திய அணி அடுத்த ஆண்டு கோப்பையை தக்க வைக்க களமிறங்குகிறது. இந்த தொடரும் கடந்த ஆண்டை போல 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பங்கு பெற உள்ளது. அதாவது ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற உள்ளன.

இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 8 சுற்றில் நான்கு அணிகளாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

T20 World cup 2026

அதிலிருந்து வெற்றி பெறுபவர்கள் இறுதி போட்டியில் மோதுவார்கள். இந்த தொடரில் ஏற்கனவே 19 அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் கடைசி அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணி நிர்ணயித்த 117 ரன்கள் என்று இலக்கை வெற்றிகரமாக எட்டி யுஏஇ அணி தற்போது உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறது.

ஓமன், நேபாள் அணிகளும் டி20 உலககோப்பையில் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம். போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான்,ஆஸ்திரேலியா, வங்கதேசம்,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கடந்த டி20 உலக கோப்பையில் டாப் ஏழு இடங்களை பிடித்து தற்போது இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து தரவரிசை பட்டியில் அடிப்படையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. அமெரிக்கா பிராந்தியத்திலிருந்து கனடா தகுதி பெற்றது. இதேபோன்று ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து இத்தாலி முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கு பெற்றுள்ளது.

நெதர்லாந்து அணியும் இந்த தொடரில் தகுதி பெற்றது. ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் இருந்து நமீபியா, ஜிம்பாவே அணிகள் தற்போது இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ள கிழக்கு ஆசிய பிராந்திய பிரிவிலிருந்து நேபால், ஓமன் மற்றும் யுஏஇ அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 20 அணிகளில் 13 அணிகள் நன்றாக கிரிக்கெட் விளையாடும் என்பதால் இம்முறை இந்தியாவுக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது.

Story first published: Thursday, October 16, 2025, 22:51 [IST]
Other articles published on Oct 16, 2025
English summary
T20 World cup- 2026- List of 20 Teams Qualified for the Tournament
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+