Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 World Cup 2026: "இப்படி ஒரு வீரரை வெளியே உட்கார வைச்சா".. ஆஸ்திரேலியாவை விளாசிய மைக்கேல் வாகன்

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் குரூப் சுற்றிலேயே ஆஸ்திரேலியா வெளியேறியது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் அடைந்த தோல்வி மற்றும் மழையால் ரத்தான போட்டிகள் காரணமாக ஆஸ்திரேலியா பரிதாபமாகத் தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அணித் தேர்வு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆசிய மைதானங்களில் சிறப்பாக விளையாடக்கூடிய ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் சேர்க்காததே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அவர் சாடியுள்ளார்.

T20 World Cup 2026 Michael Vaughan Slams Australian Selectors for Steve Smith Snub After T20 World Cup 2026 Exit

ஸ்மித் இல்லாதது ஏன்?

ஆஸ்திரேலியாவின் வெளியேற்றம் குறித்துப் பேசிய மைக்கேல் வாகன், "ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக ஸ்மித் இப்போது அவசரமாக அழைக்கப்பட்டார். ஆனால் தொடர் தொடங்கும்போதே அவர் ஏன் அணியில் இல்லை என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு வீரரை அணியில் எடுக்காமல் ஆஸ்திரேலியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க ஆள் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், "பிக் பாஷ் லீக் தொடரில் ஸ்மித் விளையாடிய விதத்தைப் பார்த்தோம். வேகப்பந்து வீச்சை அடித்து ஆடுவதிலும், சுழற்பந்து வீச்சை லாவகமாகக் கையாள்வதிலும் அவர் வல்லவர். ஆசிய மைதானங்களில் சுழற்பந்து வீச்சு எப்போதுமே சவாலாக இருக்கும். நடு ஓவரில் விக்கெட் விழாமல் ரன்களைச் சேர்க்க ஸ்மித் போன்ற ஒருவரால் தான் முடியும். அவரைத் தேர்வு செய்யாதது ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய தப்பு கணக்கு" என்று வாகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பயிற்சியாளர் ஆதரவு

வாகன் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் அவர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். ஆசியக் கண்டத்தில் நடைபெறும் போட்டிகளுக்குத் தொழில்நுட்ப ரீதியாகச் (Technical) சிறந்த பேட்ஸ்மேன்கள் தேவை. ஆனால் ஆஸ்திரேலியா வெறும் அதிரடி மன்னர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது. நெருக்கடியான நேரங்களில் அணியை மீட்க ஸ்மித் போன்ற அனுபவ வீரர் தேவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் வென்றே தீர வேண்டிய ஜிம்பாப்வே போட்டிக்கு முன் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

பிக் பாஷ் லீக் சாதனை

ஸ்மித் டி20 கிரிக்கெட்டுக்குச் சரிப்பட்டு வரமாட்டார் என்று தேர்வாளர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், சமீபத்தில் நடந்த பிக் பாஷ் லீக் தொடரில் அவர் 299 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 60 ஆகவும், ரன் குவிக்கும் ஸ்ட்ரைக் ரேட் 168 ஆகவும் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவரைத் தவிர்த்ததற்கான விலையைத் தற்போது ஆஸ்திரேலியா கொடுத்துள்ளது.

ஜிம்பாப்வே போன்ற அணிகளிடம் தோல்வியடைந்து, குரூப் சுற்றோடு நடையைக் கட்டிய ஆஸ்திரேலிய அணி, வரும் காலங்களில் அணியைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Story first published: Wednesday, February 18, 2026, 10:55 [IST]
Other articles published on Feb 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+