Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 World cup: பாகிஸ்தான் கிடையாது.. இந்த அணி தான் இந்தியாவுக்கு சவால் அளிக்கும்- பார்த்தீவ் பட்டேல்

மும்பை: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையின் எட்டு மைதானங்களில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது குரூப் ஏ பிரிவில், பிப்ரவரி 14 அன்று கொழும்பின் ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இத்தொடருக்கு முன்னதாக, முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் பார்த்திவ் படேல், இந்தியாவுக்கு கடும் சவாலை அளிக்க கூடிய அணி எது என்று கூறியுள்ளார்.

இந்தியா குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளும். இது குறித்து பேசிய பார்த்திவ் படேல், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவே இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது X பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ஆஸ்திரேலியா இந்தியாவின் கடினமான எதிரணியா எனப் பார்த்திவ்விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம், நிச்சயமாக ஆஸ்திரேலியா இந்தியாவால் வீழ்த்தப்பட வேண்டிய அணியாக இருக்கும். எந்த வடிவத்திலும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிக அவசியம்" என்று உறுதிபட பதிலளித்தார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா பலமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி அவர்களைத் தோற்கடித்தது. 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றிலும் இந்தியா முறியடித்தது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி, 2024 டி20 உலகக் கோப்பையில் ஆடிய விராட் கோலி-ரோஹித் ஷர்மா ஜோடியை விட அதிரடியானவர்களா எனக் பார்த்திவ்விடம் கேட்கப்பட்டது. அவர், "ஆம், அவர்கள் (அபிஷேக் மற்றும் சாம்சன்) மிகவும் ஆபத்தானவர்கள்" என்று பதிலளித்தார். அவர்களது ஆடும் விதம் மற்றும் அதிக ஸ்ட்ரைக் ரேட் காரணமாகவே பார்த்திவ் இதை வலியுறுத்தினார்.

உலக நம்பர் 1 டி20ஐ பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, எதிர்கொள்ள மிகவும் கடினமான சுழற்பந்து வீச்சாளரா எனப் பார்த்திவ்விடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு சிறிதும் தயக்கமின்றி, "சந்தேகத்திற்கு இடமின்றி" என்று அவர் ஆணித்தரமாக பதிலளித்தார். அவரின் பந்துவீச்சு, வரவிருக்கும் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 26, 2026, 19:20 [IST]
Other articles published on Jan 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+