Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் கிடையாது.. டி20 உலககோப்பைக்கு வருவாங்க..மானத்தை வாங்கிய ரஹானே

மும்பை 2026 T20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) முன்பு இந்தியாவுக்குப் பயணிக்க மறுத்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இறுதி முடிவை தங்கள் அரசுதான் எடுக்கும் என அறிவித்துள்ளது. PCB தலைவர் மொஹ்சின் நக்வியும் இதை சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

பிப்ரவரி 7 அன்று தொடங்கும் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் தனது 15 பேர் கொண்ட அணியை ஏற்கனவே அறிவித்துள்ளது. நக்வி வரும் வெள்ளிக்கிழமைக்குள் பங்கேற்பை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை புறக்கணிக்க "தைரியம் இல்லை" என தெரிவித்தார்.

"அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு அவ்வளவு தைரியம் இல்லை." என்று ரனே வம்பிழுத்துள்ளார். பாகிஸ்தான் அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்காக கொழும்புக்கு வர திட்டமிட்டுள்ளனர். உலககோப்பையை முழுமையாக புறக்கணிக்க வில்லை என்றாலும் இந்தியா போட்டியை மட்டும் புறக்கணிக்க திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் அல்லாமல், வங்கதேசத்துக்கு ஆமரவு தெரிவித்து, ஐசிசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்த விளையாடவும் பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. ஒருவேலை பாகிஸ்தான் டி20 உலககோப்பையை புறக்கணித்தால், அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கவும், மற்ற நாடுகள் உடனான இருத்தரப்பு தொடருக்கு தடை விதிக்கவும், பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் தொடருக்கு வெளிநாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கவும் ஐசிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.

நக்வி சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் சர்தாரி மற்றும் இராணுவ உயரதிகாரிகளை சந்தித்துப் பேசினார். முன்னாள் PCB தலைவர்களான நஜம் சேத்தி, ரமீஸ் ராஜா ஆகியோருடனும் அவர் ஆலோசித்தார். இந்த அனைத்து தரப்பினரும் அணியை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஆதரவளித்ததோடு, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஒருமித்த கருத்துடன் அறிவுறுத்தினர்.

Story first published: Thursday, January 29, 2026, 14:24 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+