Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு போகாதீங்க.. வங்கதேசத்துக்கு ஆதரவாக குதித்த பாகிஸ்தான்.. ஐசிசிக்கு அவசர கடிதம்

லாகூர்: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது தொடர்பான சர்ச்சையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசத்தின் முடிவை ஆதரித்து, பாகிஸ்தான் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கிடைத்த தகவல்களின்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து, ஐசிசிக்கு ஒரு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கருதும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கவலைகள் நியாயமானவை. இந்தியாவில் விளையாட அவர்கள் தயக்கம் காட்டுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

T20 World Cup 2026 Pakistan writes letter to ICC supporting Bangladesh in T20 World Cup venue change

வங்கதேசம் தனித்து விடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் திடீரென ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் கடிதத்தோடு நிறுத்தாமல், பாகிஸ்தான் அணி தனது உலகக்கோப்பைக்கான பயிற்சிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"இந்தியா பாகிஸ்தானுக்கு வராதபோது இடமாற்றம் செய்யப்பட்டதைப் போலவே, வங்கதேசத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்" என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் வாதமாக உள்ளது.

ஐசிசி என்ன செய்யும்?

இன்று (ஜனவரி 21) வங்கதேசத்திற்கான இறுதி கெடு முடிவடைகிறது. கொல்கத்தா மற்றும் மும்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இந்தக் குறுக்கீட்டை ஐசிசி கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. "வங்கதேச அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை" என்ற தனது முந்தைய நிலைப்பாட்டில் ஐசிசி உறுதியாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதே இந்தப் பனிப்போருக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதற்குப் பதிலடியாகவே வங்கதேசம் பிடிவாதம் பிடிக்க, இப்போது பாகிஸ்தானும் அதில் கைகோர்த்துள்ளது.

ஒருவேளை வங்கதேசமும் பாகிஸ்தானும் பின்வாங்கவில்லை என்றால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து போன்ற அணிகள் உள்ளே வர வாய்ப்புள்ளது. இன்று மாலைக்குள் ஐசிசி எடுக்கும் முடிவைப் பொறுத்தே 2026 உலகக்கோப்பையின் எதிர்காலம் அமையும்.

Story first published: Wednesday, January 21, 2026, 11:03 [IST]
Other articles published on Jan 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+