Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை புள்ளி பட்டியல்: ஒவ்வொரு பிரிவிலும் 2வது சுற்றுக்கு செல்ல போவது யார்? யாருக்கு எந்த இடம்?

மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை 18 லீக் ஆட்டம் நடைபெற்று இருக்கிறது. யாருமே எதிர்பாராத வகையில் சிறு அணிகள் அபாரமாக விளையாடி பெரிய அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருப்பதால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் புள்ளி பட்டியலில் எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஏ பிரிவில், இந்திய அணி 4 புள்ளிகள் மற்றும் 3.05 என்ற ரன் ரேட் உடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணி அதே நான்கு புள்ளிகள் உடன் 0.93 என்ற ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் யார் முதலிடத்தை பிடிக்கிறார்கள் என்பது இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.

குரூப் ஏ பிரிவை பொறுத்தவரையில் இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் முறையே 3, 4, 5 என்ற இடத்தில் உள்ளது. குரூப் பி பிரிவில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 3.12 என்ற அளவில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 3.35 என்ற அளவில் இருக்கிறது. ஜிம்பாப்வே அணி ஒரு போட்டியில் விளையாடி இரண்டு புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன.

குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து அணி இரண்டு போட்டியில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இத்தாலி அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

முன்னாள் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகள் மற்றும் மைனஸ் 0.65 என்ற ரன் ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவி நேபால் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து மோதும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். குரூப் டி பிரிவில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான், யுஏஇ மற்றும் கனடா ஆகிய அணிகள் இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் முறையே மூன்று, நான்கு, ஐந்து ஆகிய இடத்தில் உள்ளது.

Story first published: Friday, February 13, 2026, 7:15 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+