T20 World cup: இந்திய அணியை வீழ்த்த, இந்த 2 அணிகளால் மட்டுமே முடியும்.. மோயின் அலி, ரஷித் கருத்து
மும்பை: 2026 T20 உலகக் கோப்பையில் கோப்பையைத் தக்கவைக்க இந்தியா அணியின் முயற்சிக்கு சவாலாக அமையக்கூடிய இரண்டு அணிகளை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மொயின் அலி மற்றும் அடில் ரஷித் ஆகியோர் கணித்துள்ளனர். நடப்பு சாம்பியனான இந்தியாவைத் தோற்கடிக்கும் வாய்ப்புள்ள அணிகளாக மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
2024 T20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து இருதரப்பு டி20 தொடர்களில் இந்தியா தோல்வியைச் சந்திக்கவில்லை. இதற்கு காரணம், ஐபிஎல் மூலம் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர். இருப்பினும், மொயின் அலி மற்றும் ரஷித் ஆகியோர் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் எந்த இலக்கையும் துரத்தி வெற்றிபெறும் பேட்டிங் திறனைக் கொண்டுள்ளன எனக் கூறுகின்றனர்.

நடப்பு உலகக் கோப்பையின் சூப்பர்-எட்டு சுற்றில், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் தோல்வியடையாத ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ஒரே பிரிவில் உள்ளன. இந்தப் பிரிவில் இருந்து முதல் இரண்டு அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதிபெறும். இது குறித்து பேசிய மொயின் அலி, "தென்னாப்பிரிக்கா நெருங்கி வர முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் பேட்டிங் மிகச் சிறந்தது. பேட்டிங் திறமையால், அவர்களால் எதையும் துரத்தி விளையாட முடியும்," என்று தெரிவித்தார்.
இதனை ஒப்புகொண்ட ஆதில் ரஷித், "மேற்கிந்தியத் தீவுகள் துரத்தி விளையாடினால் அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்களிடம் உள்ள அசாத்திய சக்தி காரணமாக, அவர்கள் துரத்துவதில் வசதியாக உணர்வார்கள். இந்தியா எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். தென்னாப்பிரிக்காவாலும் முடியும் என்று நினைக்கிறேன். அவர்கள் தோற்கடிக்க முடியாதவர்கள் அல்ல. அவர்களின் பிரிவு கடினமானது," என்று கூறினார்.
இது குறித்து ஏற்கனவே பேசிய முகமது அமீர், பாகிஸ்தான் போட்டியைத் தவிர, இந்தியாவின் பேட்டிங் விளையாட்டுகளில் சரிந்தது. சூப்பர்-8ல் அழுத்தம் அதிகரிக்கும். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தற்போது விளையாடும் விதத்தால், அவர்களால் எந்த அணியையும் வெல்ல முடியும்," என்று அமீர் விளக்கினார்.
சூப்பர்-எட்டு சுற்றில், 2024 ஆம் ஆண்டு பதிப்பின் ரன்னர்-அப் ஆன தென்னாப்பிரிக்காவை இந்தியா பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 அன்று சென்னையில் ஜிம்பாப்வேயையும், மார்ச் 1 அன்று மும்பையில் மேற்கிந்தியத் தீவுகளையும் எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications