Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

T20 World cup: இசான் கிஷன் தேர்வு சீனியர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. தமிழக வீரர் அஸ்வின் கருத்து

மும்பை: 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இசான் கிஷன் சேர்க்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்த கில், அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
10 போட்டிகளில் விளையாடி 517 ரன்கள் குவித்தார்.

இதில் ஸ்ட்ரைக் ரேட் 197 ஆகும். இஷான் கிசன் இறுதிப் போட்டியில் 49 பந்துகளில் 101 ரன்கள் அடித்திருந்தார். இந்த தொடரில் அவர் இரண்டு சதம் விளாசி இருந்தார். இதனால் தான் இஷான் கிஷன் தற்போது டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

R Ashwin

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், இஷான் கிஷன் கிரிக்கெட்டை மதித்ததால் கிரிக்கெட் தற்போது அவருக்கு பரிசு வழங்க இருக்கின்றது. வெளியில் இருந்து பார்க்கும் மக்கள் இதை வரவேற்கலாம். சிலர் எதிர்க்கலாம். ஆனால் இஷான் கிசனுக்கு வாழ்க்கை ஒரு வட்டம் என்பது முடிவாகிவிட்டது.

இந்திய அணியில் இவ்வளவு நாள் இல்லாமல் இருந்ததற்கும் தற்போது அணியில் இருப்பதற்கும் ஒரே காரணம். அவர் கிரிக்கெட்டுக்கு உரிய மரியாதையை தற்போது அளித்திருக்கிறார் என்பதுதான். தமிழ்நாட்டில் நடைபெறும் புச்சி பாபு தொடரில் போன்ற தொடருக்கு கூட இசான் கிஷன் வந்து விளையாடினார். இது உண்மையிலேயே நல்ல விஷயம்.

ஜார்க்கண்ட் அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடினார். முதல் தர கிரிக்கெட் போட்டிக்காக இந்த சீசனில் அவர் நல்ல முறையில் தயாராக இருந்தார். தற்போது சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி ஒரு கேப்டனாக கோப்பையை வென்று தந்து இருக்கிறார்.

இது இஷான் கிஷன் என்ற ஒரு தனி நபர் பற்றி அல்ல. இஷான் கிசன் என்ற ஒரு கிரிக்கெட் வீரர் விளையாட்டு மீது கொடுத்த மரியாதையை சம்பந்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தற்போது இசான் கிஷன் தேர்வு செய்திருப்பதன் மூலம் தேர்வுக்குழு ஒரு எச்சரிக்கை மறைமுகமாக கொடுத்திருக்கிறது.

அதாவது உள்ளூர் போட்டிகளில் நீங்கள் விளையாடினால், உங்களுக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்ற செய்தியே ஆகும்.எனவே சீனியர் வீரர்கள் விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடரில் விளையாட வேண்டும் என்பதையே தேர்வுக்குழு எதிர்பார்க்கிறது. அப்படி விளையாடினால் நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு வரும் என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Sunday, December 21, 2025, 14:02 [IST]
Other articles published on Dec 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+