Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

EXCLUSIVE: எங்க நாட்டுக்கு வாங்க! வங்கதேச போட்டியை நடத்த தயார்.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மும்பை: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை மாற்றலாம் என்று ஐசிசி பரிசீலித்து வரும் நிலையில், அந்த போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் கிரிக்கெட்டைப் பாதித்துள்ளன.

இதன் காரணமாக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது. இதற்குப் பதிலடியாக, பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிபி மறுத்துவிட்டது.

Bangladesh issue

சமீபத்திய ACC மற்றும் ICC போட்டிகளில் நடுநிலையான மைதானங்களில் விளையாடியது போல, வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி பரிசீலித்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட் வாரியம் கூடுதல் போட்டிகளை நடத்தத் தயாராக உள்ளது. அவசரத் தேவையை கருதி ஆடுகளங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் தாஙன விளையாடுகிறது. மேலும் சில உலகக் கோப்பை போட்டிகளை நடத்த இலங்கை தயாராக உள்ள நிலையில், வங்கதேசப் போட்டிகளும் அங்கு சேர்க்கப்படலாம். அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, வங்கதேசப் போட்டிகள் கொழும்பு அல்லது பிற நகரங்களில் நடைபெறும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில போட்டிகள் இருப்பதால், கூடுதல் போட்டிகளைச் சேர்ப்பது ஒரு சவாலாக இருக்கும்.

தற்போது மூன்று மைதானங்கள் போட்டிகளை நடத்த முன்னிறுத்தப்பட்டுள்ளன - கொழும்பில் இரண்டு மற்றும் பல்லேகலேயில் ஒன்று. "பயணம், தங்கும் ஹோட்டல் வசதி சவால்களைச் சமாளித்தால், கூடுதல் போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தைக்கேல் களத்திற்கு தெரிவித்தார்.

போட்டி அட்டவணைப்படி, தினசரி ஒரு போட்டி இலங்கையின் ஏதேனும் ஒரு மைதானத்தில் உள்ளது. இதன் மூலம், வங்கதேசப் போட்டிகளை மற்ற இரண்டு மைதானங்களில் ஒன்றில் எளிதாகச் சேர்க்க முடியும். ஆனால், வங்கதேசம் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அந்த போட்டிகளும் இலங்கைக்கே மாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சவாலாக அமையும்.

Story first published: Sunday, January 4, 2026, 23:13 [IST]
Other articles published on Jan 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+