Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எம்.எஸ்.தோனிக்கு அப்புறம் இவரு தான்.." ஜிதேஷ் சர்மாவை கழற்றி விட்டது தப்பு.. கவாஸ்கர் ஆதங்கம்!

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், விக்கெட் கீப்பர் இடத்திற்கு இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக அணியில் இருந்த ஜிதேஷ் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், "தோனிக்கு பிறகு டிஆர்எஸ் (DRS) கணிப்பதில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை" என்று ஜிதேஷ் சர்மாவுக்காக உருகியுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

இதுகுறித்து ஜியோ ஸ்டார் சேனலில் பேசிய சுனில் கவாஸ்கர், ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். "ஜிதேஷ் சர்மா எந்தத் தவறும் செய்யவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் அவர் மிகச் சிறப்பாகவே விக்கெட் கீப்பிங் செய்தார்.

T20 World Cup 2026 Sunil Gavaskar Criticizes Jitesh Sharma s Exclusion Best at DRS After MS Dhoni

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கேப்டனுக்கு டிஆர்எஸ் (DRS) எடுப்பதில் உதவுவது மிக முக்கியம்.எம்.எஸ்.தோனிக்குப் பிறகு, டிஆர்எஸ் முடிவுகளைத் துல்லியமாக கணித்து கேப்டனுக்கு உதவுவதில் ஜிதேஷ் சர்மா தான் சிறந்தவர் " என்று மிகப்பெரிய புகழாரத்தைச் சூட்டியுள்ளார் கவாஸ்கர்.

இஷான் வருகை - ஜிதேஷ் வெளியேற்றம்

சமீபத்திய சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் இஷான் கிஷன் 500 ரன்களுக்கு மேல் குவித்து, ஜார்க்கண்ட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அசுரத்தனமான ஃபார்ம் காரணமாகவே ஜிதேஷ் சர்மா பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஷான் கிஷனுக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது.

இஷான் கிஷன் தேர்வு குறித்துப் பேசிய கவாஸ்கர், "இஷான் கிஷனுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். வெறும் ஐபிஎல் போட்டிகளை மட்டும் வைத்து வீரர்களைத் தேர்வு செய்யாமல், ரஞ்சி மற்றும் சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடுவதை வைத்து இஷானை தேர்வு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது சரியான முன்னுதாரணம்" என்றார்.

"ஜிதேஷுக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்தன. பேட்டிங்கில் கடைசி நேரத்தில் இறங்கி 158 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்தார். அவரை நீக்கியது கடினமான முடிவு தான். ஆனாலும் அவருக்கு வயது இருக்கிறது. அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும்" என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 21, 2025, 12:54 [IST]
Other articles published on Dec 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+