Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி வீரர்களுக்கு தந்தை போல் சூர்யகுமார் இருக்கிறார்.. முரளி கார்த்திக் பாராட்டு

மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 லீக் சுற்றில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமாருக்கு முடித்த பிறகு, முன்னாள் ழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் சூர்யாவின் தலைமையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 47ல் 36 போட்டிகளில் வென்றுள்ளது.

இதுவரை ஒரு டி20 தொடரில் கூட சூர்யகுமார் தலைமையேற்ற பிறகு இந்திய அணி தோற்கவில்லை. இதற்கு காரணம், சூர்யகுமார் வீரர்களுக்கு மத்தியில் நல்ல உறவுடன் இருப்பதும், துணையாக நிற்பதும் தான். மேலும் அணிக்கு எது தேவையோ, அதை கேட்டு சரியாக வாங்கி கொள்கிறார். வீரர்களின் பொறுப்பு என்ன என்பதை கூறி விட்டு, இதை தான் எதிர்பார்க்கிறேன் என்று சூர்யகுமார் தெளிவுப்படுத்தி விடுவதால், வீரர்களும் குழப்பம் இன்றி விளையாடுகிறார்கள்.

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், "நான் எப்போதும் அவரது தலைமையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அவர் நிதானமானவர், களத்திலும் வெளியேயும் நடந்துகொள்ளும் விதத்தில், ரோஹித் ஷர்மாவின் ஒரு பகுதியைக் காண்கிறேன். அவர் வீரர்களுடன் வெளிப்படையாகப் பேசுகிறார் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்."

"இது ரோஹித் ஷர்மாவிடம் பார்த்தது போன்றது உள்ளது. ஒரு கேப்டனாக, வீரர்கள் உங்களிடம் வர வேண்டும், உங்களிடம் வந்து பேச வீரர்கள் அச்சப்படக் கூடாது. நீங்கள் அவர்களுக்கு ஒரு தந்தை போன்றவர், எனவே அவர் நடந்துகொள்ளும் விதம் எப்போதும் ஈர்த்துள்ளது" என்றார்.

"களத்தில் கூட, அவர் கோபப்படுவதை நான் அரிதாகவே காண்கிறேன். அவர் புன்னகைக்கிறார் மற்றும் தனது தனித்துவமான பாவனைகளுடன் இருக்கிறார். ஒவ்வொரு போட்டிக்குப் பிந்தைய நேர்காணலிலும், எப்போதும் புன்னகைத்து, நகைச்சுவையாகப் பேசுவது ஒரு சிறந்த குணம்" என்றார்.

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஃபார்மில் உள்ளார். நான்கு போட்டிகளில், அவர் 54 சராசரியிலும், 136க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டிலும் 162 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்திய அணி அடுத்த சூப்பர் 8 சுற்றில் வரும் ஞாயிற்றுகிழமை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, February 19, 2026, 16:06 [IST]
Other articles published on Feb 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+