Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2026 பயிற்சி ஆட்டத்திற்கான அட்டவணை வெளியீடு.. இந்தியா போட்டி எப்போது?

மும்பை: டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 அன்று தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த மெகா கிரிக்கெட் தொடரில், உலகம் முழுவதிலுமிருந்து 20 அணிகள் கோப்பையை வெல்வதற்காகக் களமிறங்க உள்ளன. முக்கியப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர், பல்வேறு அணிகள் பிப்ரவரி 2 முதல் 6 வரை பயிற்சி ஆட்டங்களில் மோதுகின்றன.

இந்தப் பயிற்சிப் போட்டிகள் ஐந்து நாட்களில் பெங்களூரு, நவி மும்பை, சென்னை, கொழும்பு ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 7 அன்று உலககோப்பை போட்டிகள் தொடங்கும் நிலையில், இதன் இறுதிப் போட்டி மார்ச் 8 அன்று நடைபெறும். முக்கியச் சுற்றுகளுக்கு முன் அணிகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

பயிற்சி போட்டிகளின் முதல் நாளான பிப்ரவரி 2 அன்று, மூன்று முக்கியமான மோதல்கள் நடைபெறுகின்றன. புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஸ்காட்லாந்து அணி, பெங்களூருவில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அதேசமயம், நவி மும்பையில் அமெரிக்கா அணி இந்தியா 'ஏ' அணியுடன் பலப்பரீட்சை செய்யவுள்ளது. சென்னையில் கனடா மற்றும் இத்தாலி அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

பிப்ரவரி 3 அன்று நடைபெறும் போட்டிகளைப் பொறுத்தவரை, கொழும்பில் இரண்டு ஆட்டங்கள் வரிசையாக நடைபெறுகின்றன. ஓமன் அணி இலங்கை 'ஏ' அணியை எதிர்கொள்ளும் அதேவேளையில், நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. மற்றொருபுறம், சென்னையில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதி, கொள்ளும்.

பிப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை, மற்றொரு பரபரப்பான நிறைந்த நாளாக இருக்கும். பெங்களூருவில் ஸ்காட்லாந்து நமீபியாவுடனும், ஆப்கானிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகளுடனும் மோதுகின்றன. கொழும்பில் பாகிஸ்தான், அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியத் தொடரில் இந்தியா தனது ஒரே பயிற்சி ஆட்டத்தில் நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று, கொழும்பில் ஜிம்பாப்வே ஓமனை எதிர்கொள்ளும். சென்னையில் நேபாளம், கனடாவுடன் பலப்பரீட்சை செய்கிறது. அதே நாளில், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் கொழும்பில் மோதுகின்றன. நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் நவி மும்பையில் பயிற்சி ஆட்டத்தில் மோதும்.

பயிற்சி போட்டிகளின் இறுதியான நாளான பிப்ரவரி 6 அன்று இரண்டு ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. சென்னையில் இத்தாலி அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. மறுபுறம், பெங்களூருவில் நமீபியா அணி இந்தியா 'ஏ' அணியை எதிர்கொள்ளும். இந்த ஆட்டங்கள் உலகக் கோப்பைக்கு முன் ஒரு நல்ல பயிற்சி களமாக அமையும். இங்கிலாந்து, இலங்கை அணிகள் 3 சர்வதேச டி20 போட்டியில் விளையாடுவதால் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

Story first published: Tuesday, January 27, 2026, 18:28 [IST]
Other articles published on Jan 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+