Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் ஏன் அறிவிக்கப்படவில்லை.. பிசிசிஐ விளக்கம்

மும்பை: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் 15 வீரர்கள் மொத்தம் இடம் பிடித்துள்ளனர். துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு அக்சர் பட்டேலுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எப்போதுமே இது போன்ற ஐசிசி தொடர் அறிவிக்கப்படும்போது கூடுதலாக ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த ரிசர்வ் அணியில் குறைந்தபட்சம் 4 பேர் இருப்பார்கள். மெயின் அணியில் ஏதேனும் வீரருக்கு காயம் அடைந்தால், இந்த ரிசர்வ வீரர்கள் மாற்று வீரராக அணியில் சேர்வார்கள்.

T20 World cup 2026

இந்த சூழலில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட கில், ரிசர்வ் வீரராக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுபோன்று முகமது சிராஜ் உள்ளிட்ட வேகபந்துவீச்சாளர்களும் இந்த ரிசர்வ் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டது. அது மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மாவும், இந்த அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது பிசிசிஐ அறிவித்த அணியில் ரிசர்வ் வீரர்கள் இடம் பெறவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, ஐசிசி தொடருக்கு ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில்தான் நடைபெறுகிறது என்பதால் எப்போது வேண்டுமானாலும் மாற்று வீரர்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதனால்தான் ரிசர்வ் வீரர் தற்போது சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதற்கு இன்னொரு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. கம்பீர் முட்டாள்தனமாக நியூசிலாந்து தொடரில் ரிசர்வ் வீரர்களை மெயின் அணியில் இறக்கி வாய்ப்பு கொடுத்து அணியின் காம்பினேஷனையே கெடுத்து விடுவார் என்பதால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடைய கையை கட்டி போடும் விதமாக இந்த ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, December 20, 2025, 16:53 [IST]
Other articles published on Dec 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+