Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையை இனி 40 வருடத்திற்கு இந்த அணிகள் தான் வெல்லும்.. AI கணிப்பு

மும்பை : கிரிக்கெட் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக பரவி வருகிறது என்றால் அதற்கு டி20 ஒரு முக்கிய காரணமாகும் கால்பந்தை போல் கிரிக்கெட்டும் குறுகிய நேரத்தில் முடிவடைவதால் பல ஐரோப்பிய நாடுகளும் தற்போது டி20 போட்டிகளில் விரும்பி விளையாடுகின்றன.

இதன் காரணமாக தான் டி20 உலக கோப்பையை அதிக நாடுகள் பங்கேற்கும் வகையில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நடைபெறும் தொடர்களில் எந்த அணி t20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ஏ ஐ கணித்திருக்கிறது.

india cricket team t20 world cup

இதில் ஏஐ கணிப்பு படி 2026 ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மீண்டும் டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என அது தெரிவித்திருக்கிறது.2028 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியும் 2030 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையை வெல்லும் என ஏ ஐ குறிப்பிட்டு இருக்கிறது.

மீண்டும் 2032 ஆம் ஆண்டு இந்தியாவும், 2034 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் டி20 உலக கோப்பையை வெல்லும் என ஏ ஐ கூறி இருக்கிறது. 2036 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் 2038 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவும் 2040 ஆம் ஆண்டு பாகிஸ்தானும் டி20 உலக கோப்பையை வெல்லும் என ஏ ஐ குறிப்பிட்டு இருக்கிறது.

2042 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2044 நியூசிலாந்து அணியும், 2046 ஆஸ்திரேலியா அணியும் டி20 உலக கோப்பையை வெல்லும் என ஏ ஐ குறிப்பிட்டு இருக்கிறது.இதைத்தொடர்ந்து 2048 மற்றும் 2050 என தொடர்ந்து இரண்டு டி20 உலக கோப்பையும் இந்தியா வெல்லும் என கணித்துள்ள ஏஐ ,2052 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியும் 2054 ஆம் ஆண்டு இலங்கை அணியும் வெல்லும் என கூறியிருக்கிறது.

2056 ஆம் ஆண்டு ஜிம்பாபே அணியும், 2058 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணியும் டி20 உலக கோப்பையை வெல்லுமாம். 2006 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவும்,2062 வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2064 மீண்டும் இந்தியாவும் வெல்லும் என ஏ ஐ கணித்திருக்கிறது. ஏஐ கணிப்பு படி அடுத்த 40 ஆண்டுகளில் ஏழு முறை இந்தியா டி20 உலக கோப்பையை வெல்லும் என கூறியிருக்கிறது.

Story first published: Saturday, December 14, 2024, 17:55 [IST]
Other articles published on Dec 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+